ECRல் உள்ளாடையோடு.. நாஞ்சில் விஜயனிடம் பல பெண்களின் அந்தரங்க வீடியோ! சூர்யா தேவி பகீர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை பிரபலமான நாஞ்சில் விஜயன் பற்றி அடிக்கடி சர்ச்சை பரவி வருகிறது. அந்த வரிசையில் இப்போது டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் பற்றி பல பகீர் குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார். ஏற்கனவே திருநங்கை விஜே வைஷு நாஞ்சில் விஜயன் பற்றி பல போஸ்ட் போட்டு ஒரு பக்கம் பிரஷர் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்போ சூர்யா தேவி தன் பங்குக்கு புதிய குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார்.

சூர்யா தேவி பேட்டி

நாஞ்சில் விஜயன் பலருக்கும் பரீட்சயமானவர் தான். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் சமீப காலமாக அதிகமாகவே வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அதேபோல விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பெண் வேஷம் போட்டு நடித்துக் கொண்டும், டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் நாஞ்சில் விஜயன் பற்றி சில மாதங்களுக்கு முன்பு திருநங்கை விஜே வைஷு காவல்நிலையத்தில் கம்பளைண்ட் கொடுத்திருந்தார். அதில் என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டார், பாலியல் ரீதியாக என்னுடன் உறவு வைத்துவிட்டு இப்போது அவர் என்னிடம் பேச மறுக்கிறார் என்று பல குற்றச்சாட்டுகளை அவர் சொல்லியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து நாஞ்சில் விஜயனும் தன் பங்குக்கு சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

நாஞ்சில் விஜயன் பற்றிய சர்ச்சைகள்

அதுபோல தன்னுடைய மனைவி பிரிந்து போய்விட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு பதிவு வெளியிட்டிருந்தார். இப்படி சோசியல் மீடியாவில் எப்போதுமே பேசப்படும் நபராக மாறி இருக்கும் நாஞ்சில் விஜயன் பற்றி சூர்யா தேவி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, நாஞ்சில் விஜயன் என்னை நம்ப வைத்து ஏமாத்திட்டாரு, மதுரையில் ஒரு எக்ஸ்போ நடத்தினார். அந்த எக்ஸ்போவுக்கு அவர்தான் என்னை வர சொல்லி இருந்தாரு. அதனால நான் அங்கே போய் இருந்தேன், ஆனால் நான் அவரிடம் டிரஸ் வாங்கிட்டு பணம் கொடுக்காமல் ஓடிப் போனது போல வீடியோ எடுத்து வெளியிட்டுட்டாரு. எனக்கு அவரு ஏற்கனவே பணம் தரணும் அது பற்றி நான் புகார் கொடுத்திருந்தேன், சோசியல் மீடியாவிலும் வீடியோ வெளியிட்டு இருந்தேன். அதனால் என்னை பழி வாங்குவதற்காக அவர் இதுபோல செஞ்சுட்டாரு.

Nanjil Vijayan

ஈசிஆரில் பிரச்சனை

அது மட்டுமல்ல அவர் ஆரம்பத்தில் இருந்து பல பிரச்சனைகளில் சிக்குகிறவர். அவருடைய செல்போனில் பார்த்தால் பெண்கள் நம்பர் தான் அதிகமாக இருக்கும். அவர் பெண்களோடு தான் எப்போதும் இருப்பார். ஆண்கள் என்று சொன்னால் அவரிடம் பழகும் பெண்களின் பாய் ஃப்ரெண்ட் தான் இவருக்கும் நண்பர்களாக இருப்பார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆரில் சில பெண்களுடன் இவர் சுற்றி திரிந்து இருக்கிறார். முதல் வாரம் போய்விட்டு ஜாலியாக வந்துவிட்டார். அடுத்த வாரமும் அதே போல பெண்களோடு போகும்போது அந்த பெண்களின் பாய் ஃப்ரெண்ட்ஸ் வந்து இவரை பிடித்து அடித்து ஜட்டியோட உட்கார வச்சுட்டாங்க.

அந்தரங்க போட்டோஸ்

இப்போ கூட நான் சொல்றேன், அவரு வீட்டில் இருக்கும் ஹாட்டிஸ்க்ளில் பார்த்தால் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் அவரிடம் இருக்கு. அதை வைத்து மிரட்டலாம் என்று வீடியோ எடுத்து வைத்திருக்கிறார். அவர் வீட்டு பங்க்ஷன்க்கு நான் போயிருந்தேன் அப்போ ரோபோ சங்கருடன் நான் ஒரு போட்டோ எடுத்திருந்தேன். அந்த போட்டோ என்கிட்ட கூட கிடையாது. ஆனால் அவர் ஹார்ட் டிஸ்கில் வைத்திருக்கிறார். அவர் வீட்டுக்கு கல்யாணத்துக்கு நான் போன சமயத்தில் தான் அதை நான் பார்த்தேன் என்று சூர்யா தேவி பல அதிர்ச்சியான விஷயங்களை பேசி இருக்கிறார். இது குறித்து நாஞ்சில் விஜயன் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது ரசிகர்களுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+