வாடிய முகத்துடன் வெளியே வந்த சோனியா, ராகுல்! சிரித்தபடியே வழியனுப்பிய ஸ்டாலின்! மீட்டிங் Failure!
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்ய கோரி திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு கூட்டம் நடத்திவிட்டு வெளியே வந்த சோனியா- ராகுல் உள்ளிட்டோரின் முகத்தில் சோகம் தென்பட்டது. இதன் மூலம் இந்தியா கூட்டணியின் கோரிக்கையை ஸ்டாலின் நிராகரித்துள்ளார் என்பது தெரிகிறது.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் அதை மறுபரிசீலனை செய்யக் கோரி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று சென்னை வந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலினை 4 மணிக்கு சந்திக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அந்த சந்திப்பு 4.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே டெல்லியில் இருந்து கனிமொழியின் வருகைக்காக தனது வீட்டில் ஸ்டாலின் காத்திருந்தார். அவர் வந்ததும் அவருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பிறகு, இருவரும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் வீட்டில் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் ஒன்றாக புறப்பட்டு சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டிற்கு வந்தனர். அங்கு சரியாக 4.30 மணிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தந்தனர். அவர்களை ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்றார்.

ராகுலுக்கு ஸ்டாலின் பொன்னாடை அணிவித்த போது அவர் ஸ்டாலினை கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து உள்ளே அழைத்து சென்று தனது மகன் உதயநிதியை, சோனியாவுக்கு ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
இப்படியாக இந்த சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. இந்த சந்திப்பு முடிந்ததும் இந்தியா கூட்டணி தலைவர்களை ஸ்டாலின் வாசல் வரை வந்து வழியனுப்பினார். அப்போது சோனியா, ராகுல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் முகங்கள் வாடியிருந்தன. ஸ்டாலின் வீட்டிற்கு வந்த போது இருந்த உற்சாகம், அவரது வீட்டை விட்டு கிளம்பும் போது இல்லை. எனினும் ஸ்டாலின் சிரித்தபடியே வழியனுப்பி வைத்தார். இதன் மூலமே இந்த சந்திப்பு தோற்கடிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த சந்திப்பு கூட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் திமுக ஐடி விங் ட்வீட் போட்டுள்ளது. அதில் திமுக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தது. அந்த ட்வீட்டில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு கொடுத்தால் நம் எம்பி இடங்கள் குறையாமல் 59 ஆக உயரும். தமிழகத்தின் பங்கு 7.23 சதவீதம் வரை பாதுகாக்கப்படும் நிலை. 2051 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு! 25 ஆண்டுகளுக்கு நம் இடங்கள் குறையாது. இவ்வாறு அந்த ட்வீட்டில் அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications
