தொகுதி மறுவரையறையை ஆதரிப்பதே தமிழகத்திற்கு நல்லது- சோனியாவுடனான சந்திப்புக்கு பிறகு ஸ்டாலின் பேட்டி
சென்னை: இப்போது கொண்டுவரப்படும் தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டால்.. தமிழகத்திற்கான குறைந்தபட்ச பாதுகாப்பை இழந்துவிடுவோம். இதை தடுக்க இந்தியா கூட்டணிகளிடம் மாற்று திட்டம் இல்லை என்றும், எனவே திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அறிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஸ்டாலின் இல்லத்திற்கு வந்து, மசோதா குறித்த நிலைப்பாட்டை மாற்ற கோரினர். ஆனால், திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக திமுக அறிவித்திருக்கிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, “அன்னை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, எம்.ஏ.பேபி மற்றும் 3 மாநில முதலமைச்சர்கள், இன்று மாலை என்னை சந்தித்து தொகுதி மறுவரையறை குறித்த அவர்களது கோரிக்கைகளை எடுத்து சொன்னார்கள். நேற்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்ற நேரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், இதற்கு முன்னர்.. தொடக்கத்திலிருந்து நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் இந்த புதிய மசோதாவில் இணைக்கப்பட்டிருப்பதையும் நான் எடுத்து சொன்னேன்.
அவர்கள் இதை ஏற்றாலும், வேறு சில பிரச்சனைகளை பேசினார்கள். எங்கள் நிலைப்பாடு என்பது.. இப்போது கொண்டுவரப்படக்கூடிய மசோதா தொற்கடிக்கப்பட்டால் தமிழ்நாடு குறைந்தபட்ச பாதுகாப்பை கூட இழந்துவிடும் என்பதுதான். 2027ம் ஆண்டு ஜனவரியில் அமைய உள்ள தொகுதி மறுவரையறை கமிஷனால் தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படும். இதைய யார் நினைத்தாலும் தடுக்க, தவிரக்க முடியாது. அரசியலமைப்பு நிலை இதுதான்.
இதை மாற்றும் அரசியல் வலிமை, 3ல் 2 பங்கு நாடாளுமன்ற வலிமையோ நம்மிடம் இல்லை. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதில், அதற்கு பிறகு எந்த மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தாலும்.. தமிழ்நாடு பாதிக்கப்படும். இப்போது இருக்கும் எம்பிக்கள் தொகுதி குறையும். தமிழ்நாட்டுக்கான அரசியல் முக்கியத்துவம், வலிமை மட்டுமல்லாமல்.. தென் மாநிலங்கள் மொத்தம் பாதிக்கப்படும். மாநில கட்சிகள், குறிப்பாக தென் மாநிலத்தை சேர்ந்த கட்சிகளுக்கு இது வாழ்வா? சாவா? போராட்டம். அதை தடுக்க.. இப்போது கொண்டுவரப்படும் மசோதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழியே இல்லை.
இப்போது வந்து சந்தித்த கட்சிகளிடம் வேறு மாற்று திட்டம் இல்லை. நாடாளுமன்றத்தில் எங்களுக்கு இப்போது இருக்கும் பலத்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழகத்தின் அரசியல் வலிமையை காப்பாற்றியிருக்கிறோம். இதில் ரிஸ்க் எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ எந்த வாய்ப்பும் இல்லை. திமுக, பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சி. அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, மாநில உரிமைகளுக்காக போராடுவோம். அதில் வெற்றிப்பெறுவோம்.
அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான். தமிழ்நாடு FIRST அவ்வளவுதான்" என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
