ஜனநாயகம் காணாமல் போய்விடும்.. ’பிரதர்’ ஸ்டாலின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு! ராகுல் காந்தி உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை மசாதாவால் இந்தியாவில் ஜனநாயகம் காணாமல் போய்விடும் எனவும் தனது முடிவை பிரதர் ஸ்டாலின் மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி கூறியுள்ளார். மேலும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால் ஏற்படும் பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் ராகுல் கூறியுள்ளார்.

Rahul Gandhi

தொகுதி மறுவரையறை மசோதா நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மத்திய அரசின் இந்த திருத்தப்பட்ட மசோதாவுக்கு திமுக ஆதரவளித்து இருக்கிறது. நேற்று சென்னையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், தொகுதி மறு வரை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்களும் எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திமுக எம்பிக்கள் கனிமொழி, டி ஆர் பாலு, ஆ ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து திமுகவின் ஆதரவை தெரிவித்தனர்.

நாளை தொகுதி மறு வரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்த பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. நவம்பர் 30ஆம் தேதியான நாளை முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூடுகிறது. நாளை மக்களவையும் புதன் கிழமை மாநிலங்களவையும் கூடுகிறது.

அப்போதுதான் இந்த இரண்டு மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. திமுக ஆதரவளித்துள்ளதால் எந்தவித சிக்கலும் இன்றி இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுகவின் இந்த முடிவால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த காங்கிரஸ் தனது கூட்டணி கட்சி தலைவர்களுடன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியது. சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மறுவரையறை மசோதா குறித்தான ஆபத்துகள், அச்சங்களை திமுக தலைவர் ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் எடுத்துரைத்தனர்.

அதே நேரத்தில் அதிமுக திமுக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் இந்த மசோதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர் இந்தியா கூட்டணி தலைவர்கள்.

தொடர்ந்து இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி இருக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,' திமுக தலைவர் ஸ்டாலினிடம் எங்களின் பார்வையை விளக்கினோம். பாஜகவின் மசோதான் தென் மாநிலங்களையும் பாதிக்கும் என்று கூறினோம்.. இந்திய அரசியலமைப்பையே மாற்றக் கூடிய மசோதா இது. தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால் தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெரிய பாதிப்பு உருவாகும்.. பாஜக தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படக் கூடும்.

தொகுதி மறுவரையறை மசோதா தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும். அசாம், ஜம்மு - காஷ்மீரில் இதே மாதிரியான பரிசோதனை முயற்சிகளை செய்தார்கள். அதனை இந்தியா முழுவதும் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்றும் தமிழர்களுக்கு எதிரானது. பாஜக விரும்பும் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்காதீர்கள்.. தொகுதி மறுவரையறையில் எம்பி-க்களின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்தினால், அது பேராபத்தை விளைவிக்கும். சகோதரர் ஸ்டாலின் மசோதாவை எதிர்த்து வாக்களிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+