மம்மியும் நீயே.. டாடியும் நீயே.. ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்.. கவுண்டமணி வீடியோ போட்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதற்காக காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் இன்று சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்த சந்திப்பை முன்வைத்து தமிழக பாஜக கிண்டலடித்து போட்டுள்ள கவுண்டமணி வீடியோ இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது...!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

BJP Trolls

இட ஒதுக்கீடு மசோதா

அனைத்து மாநிலங்களுக்கும் சம விகிதத்தில் 50 சதவீதம் தொகுதிகள் உயர்த்தப்படுவதால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், இந்த மசோதாக்களை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள், திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தனர். பிறகு மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சகோதரர் ஸ்டாலின்

முன்னதாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலினை "சகோதரர்" எனக் குறிப்பிட்டு, இந்த மசோதாவை இணைந்து தோற்கடிக்க வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில், தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில், "Why are so many Congress leaders suddenly coming to TN? Comment if you know why" என்று கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, திடீரென ஏன் இவ்வளவு காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்? காரணம் தெரிந்தால் கமெண்ட் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளது.

கவுண்டமணி சீன்

இதற்காக நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடித்த காமெடி சீன் ஒன்றையும் பயன்படுத்தியுள்ளது. அந்த காட்சியில் கவுண்டமணி, ஒரு வீட்டின் வாசலில் பிச்சையெடுப்பார்.. அப்போது "மம்மியும் நீயே, டாடியும் நீயே" என்று பாடிப் பிச்சை கேட்பார்.

தேர்தல் நேரத்தில் விலகியிருந்த காங்கிரஸ் தலைவர்கள், இப்போது நாடாளுமன்றத்தில் திமுகவின் தயவை நாடி சென்னைக்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக பாஜக இந்த மீம் வீடியோவைப் பதிவிட்டுள்ளது.

திமுகவின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க வந்திருப்பதை, கவுண்டமணி பிச்சையெடுக்கும் காட்சியுடன் ஒப்பிட்டு பாஜக கிண்டல் செய்துள்ளது.

ஆனால், இந்த வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திற்குள்ளேயே பல்லாயிரக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது.. எனினும் இந்தப் பதிவு, சோஷியல மீடியாவில் அரசியல் விவாதங்களையும் கிண்டல்களையும் கிளப்பி விட்டுள்ளது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+