பாஜக குடுமியே அறிவாலயம் கையில்.. திமுக தான் கேம் சேஞ்சர்! வாசல் வரை வந்து காத்திருக்கும் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறு வரையறை மசோதா தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை ஒட்டுமொத்தமாக இந்தியா கூட்டணி தலைவர்கள் வந்து சந்தித்து இருக்கின்றனர். திமுக எடுக்க போகும் நிலைப்பாடு தான் அந்த மசோதாவின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகிறது. திமுகவுக்கு 22 மக்களவை உறுப்பினர்கள் இருப்பதால், அக்கட்சியின் நிலைப்பாடு தான்வு மசோதாவில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான் திமுக, பாஜக ஆதரவு என்ற தனது முடிவை மறுபரிசிலனை செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வந்து சந்தித்து இருக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 82 மற்றும் 170வது பிரிவுகளின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டு, மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைக்கப்படுவது வழக்கம்.

MK Stalin

ஆனால், 84-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் 2026-ம் ஆண்டு வரை மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்வதற்கான மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டுவந்தது.

அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் மக்களவைப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற முழககத்தை திமுக தான் முதன் முதலாக முன்வைத்தது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த பல்வேறு கட்சிகளும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. தொடர்ந்து, மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட மசோதா தோல்வியடைந்தது. இந்த நிலையில், நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இதையொட்டி, சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிக்கப்பட்டது. திமுக முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று திருத்தப்பட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும், தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவப் பங்கு பாதுகாக்கப்படும் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவ விகிதம் தக்கவைக்கப்படும் என்ற அடிப்படையில் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இதனைத் தமிழகத்துக்குக் கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் ஸ்டாலினை சந்தித்த சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்டோர் நேரில் வந்துள்ளனர். தற்போதைய தகவல்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சுமார் 320 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் சொல்லப்படுகிறது. மசோதா வெற்றி பெற 360 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் என்பதால், திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.

இந்தச் சூழலில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவு பாஜக ஆதரவு நிலைப்பாடு இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்பிக்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்பிக்களும் உள்ள நிலையில், அந்தக் கட்சிகளின் ஆதரவும் மசோதாவை நிறைவேற்ற தேவை. ஒருவேளை திமுக தனது ஆதரவைத் திரும்பப் பெற்றால், வேறு கட்சிகளிடம் இருந்து 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவது பாஜகவுக்கு நடக்காத காரியம் தான்.

அதனால் தான் திமுகவின் முடிவு இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுக, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ள நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள், திமுகவின் தற்போதைய முடிவை மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனது நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படையாக அறிவிக்காததால் கூட்டணிக்குள் குழப்பம் நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+