காங்கிரஸ் நேரமே சரியில்லை.. ராகு காலத்தில் மீட்டிங்கை நடத்தும் சோனியா-ஸ்டாலின்
சென்னை: தொகுதி மறுவரையறை விஷயம் குறித்து பேசுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், மாலை 4.30 தொடங்கி 6 மணி வரை ராகு காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி மறுவரையறையில் காங்கிரஸுக்கு, திமுக பிடிகொடுக்காமல் நழுவியிருக்கிறது. தேசிய விவகாரங்களில் இத்தனை காலம் காங்கிரஸுடன் ஆலோசித்து முடிவெடுத்து வந்த திமுக, இப்போது காங்கிரஸுக்கு எதிராகவே முடிவெடுத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவும் அவசியம். இந்த நேரத்தில் திமுக, ஆதரவளிப்பதாக முன்வந்திருப்பது மசோதாவை ஏறத்தாழ நிறைவேற்று நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மசோதா நிறைவேறினால் தமிழ்நாடு உட்பட மொத்த நாட்டுக்கும் ஆபத்து. எனவே மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு. கடந்த முறை இதேபோன்று மசோதா கொண்டுவரப்பட்டபோது, அதை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தோற்கடித்தது.
அப்போது காங்கிரஸுக்கு பெரிய உதவியாக இருந்தது திமுகதான். ஆனால், இந்தமுறை நிலைமை சரியில்லை. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பும், அதன் பின்பும் காங்கிரஸின் நடவடிக்கைகள் கொஞ்சம் கூட ரசிக்கும்படியாக இல்லை. எனவே காங்கிரஸ் மீது கரம் வைத்திருந்தது திமுக. ஆனால், இந்த முரண் காரணமாகத்தான் மசோதாவுக்கு ஆதரவு கொடுத்ததா? என்று கேட்டால்.. அதற்கு பதில் இல்லை. சரி எது எப்படி இருந்தாலும், நேரில் சென்று சமாதானப்படுத்துவோம் என இந்தியா கூட்டணி தலைவர்கள் புறப்பட்டு ஸ்டாலின் இல்லத்திற்கு வந்திருக்கிறார்கள்.
மாலை 4.30 மணியளவில் இந்த சந்திப்பு தொடங்கியிருக்கிறது. அதிகபட்சமாக 6 மணி வரை சந்திப்பு நடக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த நேரம் ராகு காலம் என்பதால், பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வெற்றியை ராகுல் காந்திக்கு கொடுக்காது என்று ஜோதிட நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
என்னதான் நடக்கிறது? என்பதை பொறுத்திருந்ததான் பார்ப்போமே! கட்சியின் முடிவு குறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் விளக்கமளித்திருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது, இந்தியா கூட்டணி தலைவர்கள் வீடு தேடி வந்திருப்பது திமுகவின் முடிவை மாற்றுமா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
