நாளைய பிரதமர் ஸ்டாலின்.. இந்தியா கூட்டணி தலைவர்கள் வரும் போது கோஷம் எழுப்பிய திமுக தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மு.க ஸ்டாலின் வீட்டிற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வரும் போது அங்கு இருந்த திமுக தொண்டர்கள் நாளைய பிரதமர் ஸ்டாலின் என்றும் திரும்பி போ.. திரும்பி போ, என்றும் கோஷம் எழுப்பினர்.

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், திமுகவின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வலியுறுத்த இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சென்னை வந்தனர்.

MK Stalin future Prime Minister DMK cadres raise slogans as leaders of the INDIA alliance arrive

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு முக ஸ்டாலினை சந்தித்து, முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, எம்.ஏ பேபி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். முக ஸ்டாலினை சந்திக்க ஒரே வாகனத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தந்தனர்.

இன்று காலையில் இருந்தே திமுக தலைவர் ஸ்டாலின் இல்லம் பரபரப்பாக காட்சி அளித்து வருகிறது. திமுக தொண்டர்களும் அதிக அளவில் ஸ்டாலின் இல்லம் முன்பாக திரண்டுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஸ்டாலின் இல்லத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வருகை தரும் போது அங்கு திரண்டு இருந்த திமுக தொண்டர்கள், நாளைய பிரதமர் தளபதி என்று கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து திரும்பி திரும்பி போ.. தமிழ்நாட்டை விட்டு திரும்பி போ என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே காங்கிரஸ் கட்சி, தவெக பக்கம் சென்றதால், கடும் கோபத்தில் திமுகவினர் உள்ள நிலையில், இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் வரும் போது திரும்பி போ.. திரும்பி போ என்றும் நாளைய பிரதமர் ஸ்டாலின் என்றும் கோஷம் எழுப்பியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+