சீனா மாதிரி இந்தியா மாறிடும்.. தொகுதி மறுவரையறையை ஏற்கவே முடியாது! திமுக கூட்டணி கட்சி போர்க்கொடி
நெல்லை: தொகுதி மறுவரையறை மூலம் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் சீன பாராளுமன்றத்தின் நிலை தான் இந்தியாவுக்கும் வரும். எந்த அடிப்படையிலும் தொகுதி மறுவரையறை ஏற்க முடியாது. தமிழகத்திற்கான பிரச்சனை இது கிடையாது. இது இந்திய இறையான்மைக்கு எதிரானதாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு திமுக எதிராக வாக்களிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், திமுக எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி சுற்றுலா மாளிகையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை குறித்த சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மசோதா குறித்து திமுக ஆலோசனையில் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் எங்களை அழைத்து ஆலோசனை செய்தது. அதன் அடிப்படையில் எங்கள் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

ஜவாஹிருல்லா
இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டமசோதாவிற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரையை அமப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரே நாளில் சட்டம் நிறைவேற்ற முயலும் பாஜகவின் செயல் குரியன் ஜோசப் ஆணைய பரிந்துரைக்கு எதிரானது.
தொகுதி மறுவரையறை
மக்களவை தொகுதி 816 ஆக உயரப்போவதாகவும் தமிழக சட்டமன்ற தொகுதி எண்ணிக்கை உயரப்போவதாகவும் சொல்லுவது குரியன் ஜோசப் குழு நிபந்தனைக்கு எதிரானது. தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக அமைத்த குழுவின் அறிக்கைக்கு மாற்றமாக மாறிவிடும். 816 ஆக மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறையும். அரசியலமைப்பு சட்டம் 108 பிரிவு படி கூட்டம் நடத்தினால் மிகுந்த பதிப்பு ஏற்படும்.
திமுக
விருப்பம்போல் தொகுதி மறுவரையறை நடத்தினால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். தமிழகம் தான் கருத்தரிப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 7.18 % தொகுதி இருக்கும் என திமுக தலைவர் சொல்கிறார். சுய ஆட்சிக்காக உருவாக்கப்பட்ட திமுக தமிழகத்தை தாண்டி யோசனை செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எந்த அடிப்படையிலும் தொகுதி மறுவரையறை ஏற்க முடியாது. தமிழகத்திற்கான பிரச்சனை இது கிடையாது. இது இந்திய இறையான்மைக்கு எதிரானதாக உள்ளது.
காங்கிரஸ்
நாடாளுமன்றத்தில் மசோதாவிற்கு திமுக எதிராக வாக்களிக்க வேண்டும். நாட்டின் நலனுக்காக மீண்டும் தலைமை நிர்வாகக்குழு ஆலோனை செய்து எடுக்கபட்ட முடிவின் அடிப்படையில் திமுக தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும். திமுக இதனை பரிசீலனை செய்யவேண்டும். காங்கிரஸ் கட்சியை பலி வாங்கவேண்டும் என்ற நோக்கம் திமுகவிற்கு இருக்க கூடாது. இதனை அதற்காக பயன்படுத்தக் கூடாது. திமுக இந்த நிலைப்பாட்டை மாற்றுவார்கள்.
பாஜகவின் சுயரூபம்
மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலங்களவை இடத்தை மட்டும் அதிகரிக்காமல் ஏன் நிறுவைத்துள்ளார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்த சட்டமசோதா பாஜகவின் சுய ரூபத்தை காட்டுகிறது. வட இந்தியர்கள் தென்னிந்திய மாநிலங்களை அடக்கி ஆளும் நிலை உருவாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை புகுத்துவதற்கான ஏற்பாடாக தான் இது இருக்கிறது.
சீன பாராளுமன்றம்
நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் இப்பொழுது உள்ள எண்ணிக்கையில் பலருக்கு கிடைப்பதில்லை. கூடுதல் உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காத நிலை இருக்கும். தொகுதி மறுவரை மூலம் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் சீன பாராளுமன்றத்தின் நிலை தான் இந்தியாவுக்கும் வரும்." என்றார்.




Click it and Unblock the Notifications
