ஸ்டாலினை சந்திக்க வரும் சோனியா, டிகே சிவகுமாரிடம் மேகதாது அணை கட்டும் முயற்சியை நிறுத்தச் சொல்வாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் ஆதரவைக் கோருவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, டிகே சிவகுமாரிடம் பேசி, தமிழகத்தின் காவிரி உரிமையைப் பாதிக்கும் மேகதாது அணை கட்டும் முயற்சியை உடனடியாகக் கைவிடச் சொல்வாரா? என அதிமுக எம்.பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா நாளை (நவ. 30) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு ஆதரவளிப்பதாக திமுக அறிவித்த நிலையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேச இந்தியா கூட்டணித் தலைவர்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.

mk stalin

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, சுயேச்சை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் ஆகியோர் ஒரு சிறப்பு விமானத்தில் சென்னை வந்தனர்.

மற்றொரு விமானத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடகா மாநில முதல்வர் டி.கே. சிவகுமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் வி.டி. சதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. இ.டி. முகமது பஷீர் ஆகியோரும் சென்னை வந்தனர்.

சென்னை வந்த சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள், விமான நிலையத்திலிருந்து ஒரே வேனில் டிரைடென்ட் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் மதிய உணவு அருந்திவிட்டு, ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு, வேனில் கிளம்பி, சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். 4.30 மணியளவில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசுகின்றனர். இந்தச் சந்திப்பு மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக் கோருவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, டிகே சிவகுமாரிடம் பேசி, தமிழகத்தின் காவிரி உரிமையைப் பாதிக்கும் மேகதாது அணை கட்டும் முயற்சியை உடனடியாகக் கைவிடச் சொல்லி, தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்றுவாரா? என அதிமுக எம்.பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ராஜ்யசபா எம்.பி இன்பதுரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க, தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், திமுகவின் ஆதரவைக் கோருவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தன்னுடன் அழைத்து வந்துள்ள கர்நாடக முதல்வர் டிகே சிவகுமாரிடம் முதலில் பேசி, தமிழகத்தின் காவிரி உரிமையைப் பாதிக்கும் மேகதாது அணை கட்டும் முயற்சியை உடனடியாகக் கைவிடச் சொல்லி, தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்றுவாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+