"22 எம்பி இருக்காங்க! திமுகவை விடக்கூடாதுனு அப்போவே சொன்னேன் கேட்டீங்களா!" உடைத்து பேசிய ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தாக அறிவித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சி தலைவர்களும் ஸ்டாலினை பார்க்க சென்னை வந்துள்ளனர். இதற்கிடையே தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் மட்டும், திமுக காங்கிரஸ் இடையேயான உறவு முறிந்துவிடவில்லை.. வேறு சில சம்பவங்களே அதற்கு காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். ராகுல், கார்கே மட்டுமின்றி அரசியலில் இருந்து விலகி இருந்த சோனியா காந்தியும் கூட சென்னைக்கு வந்திருக்கிறார். இது அரசியல் ரீதியாக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

P Chidambaram on split with DMK Congress DMK TVK

ப சிதம்பரம்

இந்த சூழலில் திமுக காங்கிரஸ் இடையே நல்லுறவு இருந்த சூழலில் அது மிக மோசமாக சென்றது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே இதற்கு தவெக ஆதரவு நிலைப்பாடு மட்டும் காரணமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெகவுக்கு ஆதரவு அளித்தது சரியான முடிவுதான் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், திமுகவுடனான உறவு பாதிக்கப்பட்டதற்கு பின்னணியில் வேறு சில சம்பவங்கள் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆதரவு சரி தான்

இது குறித்து அவர் கூறுகையில், "தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். ஆனால், தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றது. நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால் சட்டசபை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு இருக்கும். அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருக்கும். குடியரசு தலைவர் ஆட்சி என்பது மறைமுகமாக பாஜக ஆட்சியாகவே இருக்கும்.

எனவே, தமிழகத்தில் ஓர் அரசை அமைப்பதற்காக நாங்கள் ஆதரவு அளித்தோம். நாங்கள் மட்டுமல்ல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதில் தவறு எதுவும் இல்லை.

தவறில்லை

திமுகவால் ஆட்சி அமைக்க முடிந்திருந்தால் அவர்களுக்கு தான் ஆதரவு அளித்திருப்போம். வேறு எந்த கட்சியாவது ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்திருந்தாலும் ஆதரவு அளித்திருப்போம். ஆனால், வேறு எந்த கட்சிக்கும் அந்த வாய்ப்பு இருக்கவில்லை. விஜய்யின் தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்திருந்தன. பெரும்பான்மையை நெருங்கியிருந்த அவர், எங்களது ஆதரவை கேட்டார். நாங்களும் ஆதரவு அளித்தோம்" என்று தெரிவித்தார்.

சிக்கல் என்ன

தொடர்ந்து திமுகவுடனான உறவு முறிந்த விதம் குறித்து பேசிய ப. சிதம்பரம், "ஆனால், வேறு சில விஷயங்களும் நடந்தன. அதை கட்சிக்குள் மட்டுமே என்னால் பேச முடியும். பொதுவெளியில் கூற முடியாது. தவெகவுக்கு ஆதரவு அளித்த முடிவு சரியானது தான். ஆனால், அப்போது நடந்த வேறு சில சம்பவங்கள் திமுகவுடனான உறவை பாதித்துள்ளன. லோக்சபாவில் திமுகவுக்கு 22 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையிலும் கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, திமுகவை நம்முடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் அப்போதே சொன்னேன்" என்று அவர் தெரிவித்தார்.

திமுகவுக்கு லோக்சபாவில் 22 எம்பிக்கள் மற்றும் ராஜ்யசபாவில் 8 எம்பிக்கள் உள்ளனர். இதை உணர்ந்தே மூத்த தலைவரான ப சிதம்பரம், திமுகவை மொத்தமாக விட்டுவிட வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி நடந்த சில விஷயங்களே இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை இந்தளவுக்கு மோசமாக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+