"முதல் விக்கெட்".. தொகுதி மறுவறை ஆதரவால் சரத்பவார் கட்சியின் முக்கிய தலைவர் ராஜினாமா! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு நாளை கொண்டு வரும் தொகுதி மறுவறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியின் முக்கிய தலைவர் அபய் சிங் ஜெகதாப் தனது கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியில் முதல் விக்கெட் விழுந்துள்ளது.

ncp-sp-leader-abhay-singh-jagtap-resigns-from-party-over-delimtation-row

இதற்கான ராஜினாமா கடிதத்ததை அபய் சிங் ஜெகதாப் மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியின் மாநில தலைவர் சசிகாந்த் ஷிண்டேவிடம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், ''தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சி தனது சித்தாந்த கொள்கைகளை மறந்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தொகுதி மறுவறை மசோதாவிற்கு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் நான் எனது கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் என்பதில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.

தற்போது ராஜினாமா செய்துள்ளார். அபய் சிங் ஜெகதாப் மான்-காதவ் சட்டசபை தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணியின் தலைவராகவும், மாநில அளவில் இளைஞர் அணியின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்பவார்) அணி சார்பில் மூத்த தலைவரும், எம்எல்ஏவமான ஜிதேந்திரா அவாத் நவம்பர் 27 ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம். அது அரசியல் சாசனத்துக்கு கண்டிப்பாக தேவையானதாக உள்ளது. இந்த முடிவு கட்சி தலைவர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.

நாளை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. நாளை லோக்சபா கூடுகிறது. அப்போது மத்திய அரசு 3 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்றம் - சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சாசன 132வது திருத்த மசோதா, மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026, யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தொகுதி மறுவரையை மசோதா நிறைவேறினால் தற்போதுள்ள 543 லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்க உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் அனைத்து யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கும் 50 சதவீதம் என்ற அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. அதன்பிறகு 2051ம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+