தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்?.. எடப்பாடி பழனிசாமி சொன்ன முக்கிய காரணம்
சென்னை: தொகுதி மறுவரையறைக்கு திமுக மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பல கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. டிசம்பர் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் இப்போது இருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும். இதனால், தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். எனவே, மாநில நலனுக்காக திமுக தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் எம்பிக்கள் தொகுதி எண்ணிக்கை குறையாது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். இதையெல்லாம் மத்திய பாஜக அரசு தெளிவுபடுத்தி, அரசியல் கட்சிக்கு புரிய வைத்துதான் கோரிக்கை வைத்தார். 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும்.

பல கட்சிகள் ஆதரவு
திமுக மட்டுமல்ல இந்தியாவில் பல கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எல்லா கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. இது ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதி எடுத்திருக்கும் முடிவு. இல்லையென்றால், தமிழகத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அது தமிழ்நாட்டிற்குத் தான் பாதிப்பு.
மாநில நலனுக்காக ஸ்டாலின் ஆதரவு
கார்கே வருவது குறித்து எனக்குத் தெரியாது. எந்த அடிப்படையில் வந்து பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தன் மாநிலத்தில் இருக்கிற பிரச்சனை அடிப்படையில் தான் ஆதரவு கொடுப்பார்கள். டிசம்பர் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் இப்போது இருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும். இப்போது ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அப்படி பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஸ்டாலின் ஆதரவளித்ததாக கருதுகிறேன்.
ஐனநாயக முறைப்படி இல்லை
இடைத்தேர்தலில் நாங்கள் பெற்ற இடத்தில் போட்டியிடுவோம். அரசியல் சூழ்நிலைக்கேற்றவாறு தான் வெற்றி வாய்ப்பு வரும். தாராபுரத்தில் எங்கள் கட்சியில் இருந்தவர்கள் மீது வழக்கு போட்டார்கள், சிறை பிடித்தார்கள். ஒருவரை தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்துவிட்டு கைது செய்யப்படவில்லை. அந்த நபர் தவெக தலைவர் வரும்போது மாட்டு வண்டி ஓட்டுகிறார். இது அராஜகம், ஆட்சி, அதிகாரம், மிரட்டல், உருட்டல், பணம், கூட்டணி பலத்தை வைத்து தான் தவெக ஜெயித்தார்களே தவிர, ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்கவில்லை என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
