விவாகரத்து.. திரிஷா ஸ்டோரியால் கிளம்பிய விவாதம்! இதில் உள்குத்து இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையமே இல்லாத இடத்தில் இருந்தாலும் பொழுதை எப்படி சுவாரசியமாக கழிப்பது என்று திரிஷாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது போல. தற்போது அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "10 நாட்களில் மூன்று புத்தகங்கள், அதுவும் நெட்வொர்க் இல்லாத இடத்தில்" என குறிப்பிட்டு இருக்கும் திரிஷா தாம் படித்த புத்தகங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். ஆனால் அந்த 3 புத்தகங்களில் ஒரு புத்தகத்தின் பெயர் தான் இப்போ ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Trisha

திரிஷா இன்ஸ்டா ஸ்டோரி

திரிஷா பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் ஃப்ரீயா மெக்ஃபேடன் எழுதிய The Divorce, The Intruder மற்றும் ரைலி சேகர் எழுதிய Home Before Dark ஆகிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குறிப்பாக The Divorce என்ற புத்தகத்தின் பெயரை பார்த்த ரசிகர்களுக்கு திரிஷா ஏற்கனவே திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி பேசிய பழைய பேட்டி நினைவிற்கு வந்திருக்கிறது. அதனால் இந்த ஸ்டோரியை வைத்து சோசியல் மீடியாவில் பலரும் அவருடைய பழைய கருத்துக்களை இப்போது பகிர்ந்து புத்தகத்துடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

திரிஷாவின் பழைய பேட்டி

சில வருடங்களுக்கு முன்பு திரிஷா ஒரு பேட்டியில் பேசும்போது, ஒருவரை திருமணம் செய்வதற்கு முன்பு 100 முறை யோசிப்பேன். திருமணம் செய்து கொண்டு பிறகு விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. சுற்றியுள்ள பல திருமணங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட வாழ்க்கைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. காதலித்த வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளக்கூடிய சரியான துணையை சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். திருமணத்தை விட காதல் முக்கியம்" என்றும் அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் திரிஷாவுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து பின்னர் அது முறிந்ததும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தான் திருமணத்திற்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனை வந்தபோது நடிப்பை விடாமல் தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கையை தேர்வு செய்ததாகவும் அவர் முன்பு பேசி இருந்தார். அதனால் அவருடைய திருமணம் குறித்த பழைய பேட்டிகள் மீண்டும் இணையத்தில் பேசப்படுவது உண்டு.

Trisha

ஸ்பெஷல் புத்தகம்

இப்போது அவர் விவாகரத்து ( The Divorce) என்ற புத்தகத்தை படிப்பது, அந்த புத்தகத்தின் கதையை ரசிப்பதற்காகவோ அல்லது ஒரு திரில்லர் வாசிப்பு அனுபவத்திற்காக இருக்கலாம். ஃப்ரீயா மெக்ஃபேடன் புத்தகங்கள் பொதுவாக மர்மம், எதிர்பாராத திருப்பம், திரில்லர் கதைகளுக்கான பெயர் பெற்றவை. அதனால் புத்தகத்தின் பெயரை மட்டும் வைத்து திரிஷாவின் வாழ்க்கையுடன் சிலர் தொடர்பு படுத்தி விவாதித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கேள்வி

ஏற்கனவே சமீப காலமாக திரிஷா பற்றி பல சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் இப்போது இவர் எதற்காக இந்த தலைப்பில் புத்தகத்தை படிக்கிறார்? அதுவும் தான் படித்த புத்தகத்தை அனைவருக்கும் காட்டி இருக்கிறார், இதில் எதுவும் உள்குத்து இருக்கிறதா? யாரையும் டைவர்ஸ் செய்ய வைக்க போகிறாரா? அல்லது யாருடன் மனக்கசப்பு ஏற்பட்டு தான் பிரிந்து இருக்கிறேன் என்று சொல்கிறாரா? என்று ரசிகர்கள் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+