"பிரதர் ரிட்டர்ன்ஸ்" ஸ்டாலின் பிறந்தநாளன்று மிஸ்ஸான வார்த்தை.. ராகுல் காந்தி அடித்த யூடர்ன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராகுல் காந்தி, "பிரதர்" என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை. தற்போது தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்திற்காக சென்னை வருவதை உறுதி செய்துள்ள ராகுல் காந்தி, சகோதரர் ஸ்டாலின் என்று வார்த்தையை மீண்டும் பயன்படுத்தி உள்ளார். இது திமுகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

2025ம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு வாழ்த்தி இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, என்னுடைய சகோதரர் ஸ்டாலின் என்று வாழ்த்தி இருந்தார். ஆனால் 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன் மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போதும் ராகுல் காந்தி தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை கூறி இருந்தார்.

Rahul Gandhi

ஆனால் இம்முறை ராகுல் காந்தியின் பிறந்தநாள் வாழ்த்தில் சகோதரர் என்ற வார்த்தை வேண்டுமென்றே மிஸ்ஸாகி இருந்தது. அதற்கு பதிலாக ஸ்டாலினின் மறுமொழியிலும், பிரதர் என்ற வார்த்தையை தவிர்த்திருந்தார். இதனை பகிர்ந்த அப்போதைய பாஜக நிர்வாகி அண்ணாமலை, ஏன் இம்முறை மட்டும் பிரதர் மிஸ்ஸிங் என்ற கேள்வியை எழுப்பி கிண்டல் செய்திருந்தார்.

தொடர்ந்து சட்டசபைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்த சூழலில், உடனடியாக திமுக உடனான கூட்டணியை முறித்து கொண்ட காங்கிரஸ், தவெக பக்கம் நகர்ந்தது. முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் லோக்சபா, உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக உடன் தான் கூட்டணி என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

இதன்பின் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலரும் தொடர்ச்சியாக திமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். கார்த்தி சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை மட்டுமே திமுகவை நட்புடன் அணுகினர். தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த பின், அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து அனைவரும் ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கு வருகின்றனர்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ஸ்டாலினை சகோதரர் என்று குறிப்பிட்டுள்ளார். மார்ச் 1ஆம் தேதி ராகுல் காந்தியின் பதிவில் மிஸ்ஸான சகோதரர் என்ற வார்த்தை, தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தேவையை பொறுத்து ராகுல் காந்தி திமுகவையும், ஸ்டாலினையும் அணுகுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+