எஸ்.பி.வேலுமணியின் அஸ்திவாரத்தில் கை வைத்த எடப்பாடி.. அதிமுகவை அதிர வைக்கும் சீக்ரெட் ஆபரேஷன்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்தது. தவெக ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக முயற்சித்ததாக தவெக குற்றம் சாட்டியது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அதிமுக அடுத்தடுத்து தோல்விகளால் அதிர்ச்சியில் உள்ளது. ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர். எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து கொண்டே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி, வேலுமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

Edappadi Palanisamy

எடப்பாடி பழனிசாமி வேலுமணி சண்டை

2017 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சி மற்றும், கடந்தமுறை அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மிகவும் நெருக்கமாக இருந்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி, மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் வரை 13 தேர்தல்களில் அதிமுக தோல்வியடைந்தது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் மோதல் அதிகரித்தது. தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி உள்ளிட்டோர் எதிராக வாக்களித்தனர்.

ஆனால் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகளை எடப்பாடி பறித்தார். திமுகவுடன் இணைந்து எடப்பாடி ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக புகார் கூறினார்கள். இதை சமாதானப்படுத்த எடப்பாடி எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதவியை வேலுமணி அணியினர் ஏற்கவில்லை.

கடும் விமர்சனம்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டி.டி.வி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று வேலுமணி கூறினார். எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில், "அதிமுக கட்சியில் உள்ள இரண்டு கோடி பேர்களில் ஒருவர்தான் வேலுமணி" என்று கூறினார். இதற்கு வேலுமணி அளித்த விளக்கத்தில், "அந்த இரண்டு கோடி பேர் தேர்வு செய்து பொதுச்செயலாளர் ஆனீர்கள். தொண்டர்களின் கருத்துகளை மதிப்பது நல்ல தலைமைக்கு அழகு" என்று கூறினார்.

இதன் பிறகு எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் இடையே சண்டை தீவிரமாகியுள்ளது. எஸ்.பி.வி ஆர்மி என்கிற பெயரில் வேலுமணி ஆதரவாளர்கள், சமூகவலைதளங்களில் எடப்பாடியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதிமுக தலைமைக்கு வேலுமணி தான் தகுதியானவர் என்று பதிவிட்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா இணைந்து இருவரும் இணைந்து எஸ்.பி. வேலுமணியை அதிமுக தலைமை பதவி ஏற்க அழைக்கும்படியாக போட்டோவை சித்தரித்து வெளியிட்டனர்.

ஆதரவாளர்களுடன் சீக்ரெட் ஆலோசனை

இதற்காக கோவை புறநகர் மத்திய மாவட்டம் ஐடி விங் மாவட்ட இணை செயலாளர் சபரி விக்ரம், குறிச்சி பகுதி ஐடி விங் செயலாளர் சுரேஷ்குமார், வேணுகோபால், சேகர், பிரபாகரன், பரத்குமார்
உள்ளிட்ட வேலுமணி ஆதரவாளர்கள் 6 பேரை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கினார். அவர்களை கட்சியில் இருந்து நீக்கிய அடுத்த நாளே, அவர்களை கோவை சுகுணாபுரத்தில் உள்ள தன் வீட்டில் வேலுமணி சந்தித்து பேசினார்.

இதுவரை வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட, அவரின் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோரை எடப்பாடி நீக்கியுள்ளார். இதில் வேலுமணி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கோபமடைந்தனர். ஆதரவாளர்களுடன் அவர் ரகசிய ஆலோசனையும் நடத்தினார். கட்சியில் இருந்து நீக்கியவர்களிடம் ஆறுதல் கூறிய அவர், "எதற்கும் கவலைப்படாதீர்கள். இதை சட்டப்படி சந்திப்போம். எடப்பாடிக்கு சட்டப்படி குடைச்சல் கொடுத்து இழந்ததை பிடிப்போம்" என கூறியுள்ளார். இதனால் அதிமுகவில் மேலும் பரபரப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+