இனி விசிக நினைச்சா கூட வின் பண்ண முடியாது! திருமாவிற்கே சிக்கல்! திமுக வைத்த தரமான ஆப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு கொண்டு வரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்க) திமுக அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "திமுக எடுத்துள்ள இந்த நிலைப்பாடு தேசத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கே ஆபத்தானது.. இது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மற்றும் சங் பரிவார்களின் சதி அரசியலுக்குத் துணைபோகும் செயல்" எனக் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்னதாக, திமுக வரலாற்றுப் பிழை செய்துவிடக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

திருமாவளவன் இந்த மசோதாவை இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதற்குப் பின்னால், தமிழ்நாட்டில் உள்ள தனித் தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்படும்போது விசிகவின் வாக்கு வங்கிக்கு ஏற்படக்கூடிய சவால்களும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன.

VCK

தனித் தொகுதிகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களும், விசிகவின் பலமும்

புதிய மசோதாவின்படி, தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59 ஆகவும், சட்டமன்றத் தொகுதிகள் 234-லிருந்து 351 ஆகவும் உயர்த்தப்படும்போது, தொகுதி மறுவரையறை ஆணையம் அனைத்துத் தொகுதிகளின் எல்லைகளையும் மாற்றி அமைக்கும். இதனால் பல தனித் தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக மாறவோ அல்லது புதிய தொகுதிகளாகப் பிரிக்கப்படவோ வாய்ப்புள்ளது. இது விசிக வலுவாக உள்ள பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்:

1. சிதம்பரம் மற்றும் கடலூர் மண்டலம்

விசிக தலைவர் திருமாவளவன் 2009, 2019, மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதி, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. அதேபோல், 2006, 2021, மற்றும் 2026 தேர்தல்களில் விசிக தொடர்ந்து வென்ற கோட்டையான காட்டுமன்னார்கோவில் (தனி), திட்டக்குடி (தனி) மற்றும் பண்ருட்டி, புவனகிரி, நெல்லிக்குப்பம் பகுதிகளில் விசிகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. தொகுதி எல்லைகள் பிரிக்கப்படும்போது, இத்தொகுதிகளில் வன்னியர் உள்ளிட்ட பிற சமூகங்களின் வாக்கு விகிதம் அதிகரித்து, தனித் தொகுதிகளின் தன்மை மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

2. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மண்டலம்:

2019 முதல் விசிக வசம் உள்ள விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி) மற்றும் கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் விசிகவின் முக்கியப் பலமாக உள்ளன. மறுவரையறையில் இத்தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக மாற்றப்பட்டால், விசிகவின் வெற்றி வாய்ப்புகள் சவாலாக மாறக்கூடும்
.
3. வட தமிழ்நாடு மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகள்:

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் விசிக வென்ற செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் மதுராந்தகம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதிகளிலும், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள அரக்கோணம் (தனி), கே.வி.குப்பம் (தனி) தொகுதிகளிலும் விசிகவுக்குத் தீர்மானிக்கும் வாக்கு வங்கி உள்ளது. மேலும், வட சென்னையின் பெரம்பூர், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் மற்றும் திருவள்ளூர் பகுதிகளிலும் விசிக வலுவாக உள்ளது.

4. காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள்:

டெல்டா மாவட்டங்களில் நாகப்பட்டினம் (2021-ல் விசிக வென்ற தொகுதி), மயிலாடுதுறை, திருவாரூர், திருவிடைமருதூர் பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் தேனி மாவட்டத்தின் பெரியகுளம் (தனி) மற்றும் மதுரைப் பகுதிகளிலும் விசிகவுக்குக் கணிசமான வாக்குகள் உள்ளன.

இங்கெல்லாம் தொகுதிகள் பிரிக்கப்படும் போது, மறுசீரமைக்கப்படும் போது அங்கே விசிக தனது பவரை இழக்கலாம்.

இரு தரப்பு வாதங்கள் என்ன?

ஒருபுறம், "தமிழ்நாட்டின் 7.18% பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு, 2051-ம் ஆண்டு வரை மாநில விகிதம் மாறாது என்ற எழுத்துப்பூர்வ உத்தரவாதம் மசோதாவில் உள்ளதால், தமிழ்நாட்டின் நலன் கருதியே ஆதரவு அளிக்கிறோம்" எனத் திமுக தலைமை விளக்கமளித்துள்ளது.

மறுபுறம், "அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்களை உயர்த்துவது பாஜகவின் மறைமுகத் திட்டத்திற்கு வழிவகுக்கும்;.. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இதைத் தடுக்க வேண்டும்" எனத் திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். நாளை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்போது, விசிக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிராக வாக்களிக்கத் தயாராகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+