தாகூர், பிரவீன் சீண்டலை வேடிக்கை பார்த்த டெல்லி! இன்று அறிவாலய வாசலில் நிற்கும் நிலை! ஸ்டாலின் கேம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்திய அரசியலின் மொத்த கவனமும் இன்று சென்னை பக்கம் திரும்பியுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ள 132-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சமாதானப்படுத்த டெல்லி மற்றும் பிற மாநிலத் தலைவர்கள் சென்னைக்குப் படையெடுத்து வருகின்றனர்.

சென்னைக்கு வரும் முக்கியத் தலைவர்களின் உத்தேசப் பட்டியல்
இன்று மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது:
1. மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ் தேசியத் தலைவர்)
2. சோனியா காந்தி (காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர்)
3. ராகுல் காந்தி (மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்)
4. மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதலமைச்சர்)
5. எம்.ஏ.பேபி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்)
6. கபில் சிபல் (மூத்த வழக்கறிஞர் மற்றும் மாநிலங்களவை எம்பி)
7. வி.டி.சதீசன் (கேரள முதலமைச்சர்)
8. டி.கே.சிவக்குமார் (கர்நாடக முதலமைச்சர்)
9. ரேவந்த் ரெட்டி (தெலங்கானா முதலமைச்சர்) மற்றும் பல முக்கியத் தலைவர்கள் (இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உள்ளிட்டோர்).
இதேபோல், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சரத் பவாரைச் சந்திக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் மும்பைக்குச் செல்கின்றனர்.
காலம் மாறிய கதை - அன்று அமைதி காத்த காங்கிரஸ், இன்று கெஞ்சும் நிலை!
இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளான மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் திமுக தலைமையையும், திமுக நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியபோது காங்கிரஸ் மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்தது.
அதோடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்து ஆட்சியில் பங்கு பெற்றது. கடந்த சட்டசபை தேர்தலில்.. தோல்வியில் இருந்து திமுக மீள்வதற்குள்ளாகவே, கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி திமுகவைக் கைவிட்டு வெளியேறியது. தேர்தல் நேரத்திலேயே திமுகவிற்காக காங்கிரஸ் பிரச்சாரம் செய்யவில்லை. ஸ்டாலினுடன் மேடை ஏற ராகுல் மறுத்தார். காங்கிரஸ் - தவெக இடையே ரகசிய டீலிங்கும் இருந்தது.
இப்படி திமுகவை முதுகில் குத்தியதோடு.. விஜய் தலைமையிலான தவெக அரசில் இணைந்த காங்கிரஸ், 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் 2 அமைச்சர் பதவிகளைப் பெற்று ஆட்சியில் பங்கு கொண்டது. 2 அமைச்சர் பதவிக்காக.. 1 எம்பி பதவிக்காக திமுகவை ராகுல் பகைத்துக்கொண்டார்.
ஆனால், இன்று காலம் தலைகீழாக மாறிவிட்டது. நாடாளுமன்றத்தில் பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், திமுகவின் 22 மக்களவை எம்பிக்கள் மற்றும் 8 மாநிலங்களவை எம்பிக்களின் ஆதரவு காங்கிரஸுக்கு மிக அவசியம். திமுக ஆதரவு அளித்தால் இந்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும் என்பதாலும், அது வட இந்தியாவில் காங்கிரஸின் அரசியல் எதிர்காலத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதாலும், இன்று காங்கிரஸ் மேலிடம் ஸ்டாலினின் ஆதரவைப் பெற நேரடியாகச் சென்னைக்கே வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஸ்டாலின் மனம் மாறுவாரா?
நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டின் 7.18% பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு, 2051-ம் ஆண்டு வரை மாநில விகிதம் மாறாது என்ற நிபந்தனை ஏற்கப்பட்டதால் மசோதாவை ஆதரிக்கிறோம்" என ஸ்டாலின் திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டார்.
இன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோரின் நேரடி வருகைக்குப் பிறகு, ஸ்டாலின் தனது முடிவில் ஏதேனும் மாற்றம் செய்வாரா அல்லது தமிழ்நாட்டின் நலனே முக்கியம் எனத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பாரா என்பது இன்றைய சந்திப்புக்குப் பிறகு தெரிந்துவிடும்.





Click it and Unblock the Notifications
