ஆஹா..ஒன்னு கூடிட்டாங்களே! பாஜகவுடன் திமுக போட்ட டீலிங்! ஏக குழப்பத்தில் எடப்பாடி! அதிமுகவுக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. மக்களவையில் 22 எம்பிக்கள், மாநிலங்களவையில் 8 எம்பிக்களை கொண்டுள்ள திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிட தகுந்த முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக தர்ம சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தொகுதி மறுவரையறை மசோதா நவம்பர் 30ஆம் தேதி (நாளை) தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட உள்ளது. 543 என்ற எண்ணிக்கையில் இருக்கும் மக்களவைத் தொகுதிகளை 800க்கும் அதிகமாக உயர்த்துவது தான் இந்த மசோதாவின் முக்கிய நோக்கம்.

மேலும், இதனுடன் சேர்த்து மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவும் வர இருக்கிறது. இதன் மூலம் மக்களவையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உயர்த்தப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சட்டசபை எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

DMK BJP Alliance

தொகுதி மறுவரையறை மசோதா

கடந்த 2026 தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது மிக உக்கிரமாக இந்த மசோதாவை எதிர்த்த திமுக தற்போது அந்த மசோதாவுக்கு ஆதரவு தருவதாக அதிரடியாக அறிவித்து தேசிய அளவில் கவனத்தைப் பெற்று இருக்கிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

திமுக

தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 என்ற மக்களவைத் தொகுதி பங்கு குறையாமல் பாதுகாக்கப்படுவதாகவும் பிரதிநிதித்துவ விகிதம் 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி இருக்கும் என்ற தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதால் இந்த மசோதாவை ஆதரிப்பதாக திமுக கூறுகிறது. மேலும் திமுகவின் இந்த முடிவு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கட்சிகள் எதிர்ப்பு

மக்களவையில் 22 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களும் கொண்ட திமுக தொகுதி மறு வரை ஆணையத்தின் செயல்பாடுகளில் சில சந்தேகங்களுக்கு திருத்தங்கள் கூறவும் திட்டமிட்டு இருக்கிறது. திமுக தங்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறியிருந்தாலும் ஏற்கனவே அந்த கட்சி கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

அதிமுக

இது ஒரு புறம் இருக்க அதிமுகவின் நிலை தான் தர்ம சங்கடமாகிவிட்டது. மக்களவையில் எந்த தீர்மானத்தையும் பாஜகவால் வெற்றிகரமாக கொண்டு வர முடியும். ஆனால் மாநிலங்களவையில் தான் அதற்கு சிக்கல் இருக்கிறது. கடந்த முறை இந்த மசோதா கொண்டுவரப்பட்டபோது மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததுடன் மீண்டும் அந்த மசோதாவை கொண்டு வருகிறது.

பாஜக

3ல் 2 பங்கு என பார்க்கும்போது 300 என்ற எண்ணிக்கை இருந்தாலே பாஜகவால் இந்த மசோதாவை வெற்றி பெற செய்ய முடியும். தற்போதைக்கு அதற்கு பலம் இருக்கிறது என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர் துருவங்கள் ஆக இருக்கும் திமுகவும் அதிமுகவும் இந்த மசோதாவை ஆதரிப்பதாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே பாஜகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுக, திமுக தங்கள் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டு வருவதாக தமிழக வெற்றி கழகம் சொல்லி வருகிறது.

தவெக திட்டம்

தற்போது மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதன் மூலம் மூன்று கட்சிகளும் கூட்டணி அமைக்கிறது என பிரச்சாரம் செய்ய தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெல்லவில்லை. அதற்கு திமுக அலை தான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளியது திமுக.

எடப்பாடி பழனிசாமி

அதே நேரத்தில் சட்டமன்ற பலத்தின் அடிப்படையில் தற்போது 4 மாநிலங்களவை உறுப்பினர்களை வைத்திருக்கிறது அதிமுக. தம்பிதுரை, இன்பதுரை,தனபால், தர்மர் ஆகியோர் மக்களவை எம்பிக்களாக இருக்கும் நிலையில் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+