வசூலில் மீண்டும் கொஞ்சம் நிமிர்ந்த "ஓம்”.. தனுஷ் படத்துக்கு 9வது நாளில் ரசிகர்கள் கொடுத்த சிக்னல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி என பெரிய நட்சத்திரங்கள் இணைந்த ஓம் படத்தில் ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்பு நல்ல ஓபனிங் ஆக மாறியது. ஆனால் முதல் நாள் காட்சியை பார்த்ததுமே படத்திற்கு கலவையான விமர்சனம் வர தொடங்கி விட்டது. அதனால் முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு வசூல் குறைய தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இப்போது படம் வெளியாகி 9 நாள் முடிவில் எவ்வளவு வசூல் பெற்றது என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Om

ஓம் 9வது நாள் வசூல் நிலவரம்

9வது நாளான நேற்று இந்த படம் இந்தியாவில் சுமார் 3.33 கோடி நெட் வசூல் செய்திருக்கிறது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது இது நல்ல உயர்வு. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் நெட் வசூல் 75.10 கோடியாகவும், கிராஸ் வசூல் 87.05 கோடி ஆகவும் தொட்டிருக்கிறது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்து உலக அளவில் 118.65 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் கணக்குகள் தெரிவிக்கின்றன.

2வது வார வசூல் நிலவரம்

ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் முதல் வாரத்தில் கிடைத்த வசூலை இரண்டாவது வாரத்தில் அப்படியே தக்க வைக்க முடியவில்லை. முதல் வாரத்தில் மட்டும் 69.30 கோடி நெட் வசூல் செய்த படம் 2வது வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் சுமார் 5.80 கோடியை சேர்த்து இருந்தது. அதாவது இப்போது படத்திற்கு புதிய ரசிகர்கள் திரையரங்குக்கு வருவதை காட்டிலும் ஏற்கனவே வந்த வரவேற்பை வைத்து ஓட்டத்தை தொடர வேண்டிய கட்டம் இருக்கிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அதே நேரத்தில் சனிக்கிழமை உயர்ந்திருப்பதால், ஞாயிற்றுக்கிழமையும் நல்ல வசூல் கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. விடுமுறை நாளில் மீண்டும் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தால் இரண்டாவது வார வசூலுக்கு அது நிச்சயம் உதவியாக இருக்கும். 100 கோடியை உலக அளவில் கடந்து விட்டது என்பது படத்திற்கு முக்கியமான சாதனை தான்.

ஆனால் அதோடு நின்று விடாமல் அடுத்த வாரத்திலும் தியேட்டர்களில் எந்த அளவுக்கு கூட்டத்தை தக்க வைக்கிறது என்பதுதான் இப்போ முக்கியம். ஆரம்பத்தில் இருந்த வேகத்தை பிடிக்க முடியுமா? அல்லது வசூல் மெதுவாக குறைக்க தொடங்குமா? என்பது இந்த வார இறுதி தான் ஓரளவு முடிவு செய்யும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+