கைக்கொடுத்த ஜோதிடம்.. அபுதாபியில் லாட்டரியில் அடித்த ‘ஜாக்பாட்’.. லட்சாதிபதியான தமிழக இன்ஜினியர்
அபுதாபி: ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபியில் 'பிக் டிக்கெட்' லாட்டரியில் தமிழகத்தை சேர்ந்த 35 வயது இன்ஜினியருக்கு ரூ.6.30 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இவர் ஜோதிடத்தின் உதவியுடன் லாட்டரி வாங்கி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் அரவிந்தன். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கடந்த ஆண்டு 6 மாதம் வரை பணியாற்றினார். அப்போது அவருடன் பணியாற்றிய பணியாளர்கள் மூலமாக 'பிக் டிக்கெட்' எனும் லாட்டரி பற்றி அறிந்து கொண்டார்.

அபுதாபியில் பணி முடிந்த பிறகும் அரவிந்தன் தொடர்ந்து லாட்டரி வாங்கி வந்தார். அரவிந்தனுக்கு அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை உண்டு. இதனால் அவர் லாட்டரி வாங்கி கொண்டு இருந்தார். தனது நண்பர்களுடன் சேர்ந்து அரவிந்தன் 'பிக் டிக்கெட்' லாட்டரி வாங்கினார். ஆனால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை.
இதனால் அவர் தனது சகோதரருடன் சேர்ந்து நவம்பர் மாதத்துக்கான 'பிக் டிக்கெட்' லாட்டரி வாங்கினார். அரவிந்தனுக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உண்டு. இதனால் இந்த லாட்டரியை அவர் ஜோதிடத்தின் அடிப்படையில் வாங்கினார். ஜோதிடத்தின்படி குறித்து கொடுத்த எண்ணை அரவிந்தன் வாங்கியிருந்தார்.
அதன்படி தற்போது 'பிக் டிக்கெட்' வாராந்திர குலுக்கலில் அரவிந்தனுக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளது. 25,00 திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.6.30 லட்சமாகும். இதனை அவர் தனது சகோதரருடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். இதனால் அரவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹேப்பியாகி உள்ளனர்.
குறிப்பாக அரவிந்தனின் தாயாருக்கு உடல்நல பிரச்சனை உள்ளது. அதனை சரிசெய்ய பணம் தேவையாக இருந்த இந்த சமயத்தில் இந்த பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதுபற்றி அரவிந்தன், 'கல்ஃப் நியூஸ்' செய்தி நிறுவனத்திடம், ''லாட்டரி பரிசுத்தொகை எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.இந்த பரிசுத்தொகை எனக்கு மிக முக்கியமான நேரத்தில் கிடைத்துள்ளது. பணத்தை எனது தாயாரின் மருத்துவச் செலவுகளுக்கு பயன்படுத்தப்போகிறேன்.
என்னை போல் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நண்பர்களுக்கும் இதுபோன்ற பரிசு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் நான் பெற்ற மகிழ்ச்சியை எனது நண்பர்களும் பெற வேண்டும்.'' என்றார். நவம்பர் மாதத்துக்கான 'பிக் டிக்கெட்'குலுக்கலில் அரவிந்தன் தவிர இன்னும் 3 இந்தியர்களுக்கும் ரூ.6.30 லட்சம் பரிசு விழுந்துள்ளது.
அதன்படி ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான மகரந்த் நிவ்ருத்தி பாட்டீல்,ஷரஃபுதீன் காசிம்,
அபுதாபியில் தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளராகப் பணிபுரியும் பிரீத்தி ஆண்டோ அந்தோணி உள்ளிட்டோருக்கும் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதில் பரிசு விழுந்தது பற்றி அறிந்ததும் பிரீத்தி ஆண்டோ அந்தோணி ஆனந்த கண்ணீர் விட்டார் என்பது குறிப்பிடத்க்கது.




Click it and Unblock the Notifications
