பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! ஜாமீன் கேட்டு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மனு!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது டிசம்பர் 1ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

பெண் ஆட்சியர் ஒருவருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச மெசேஜ் அனுப்பி, அவரது முகாம் அலுவலகத்திற்கே வந்து தொல்லை கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் புகார் கொடுத்த போதிலும் அதுகுறித்து எந்த தகவலும் வெளியே வராமல் இருந்தது. இந்த நிலையில் அந்த விஷயத்தை முதன்முதலில் வெளியே கொண்டு வந்தவர் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழிதான். இவரது கண்டனத்திற்கு பிறகுதான் இந்த விஷயம் பூதாகரமானது.

Kallakurichi TVK MLA Arul Vignesh

கனிமொழி என்ன செய்வார்?

ஆனால் இவரது குற்றச்சாட்டை தவெக அமைச்சர்கள் பொய்யான குற்றச்சாட்டு என வாதிட்டனர். மேலும், "ஒருவேளை பாதிக்கப்பட்ட ஆட்சியர் அப்படி நடக்கவே இல்லை என சொன்னால் கனிமொழி என்ன செய்வார்?" என சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் சம்பந்தப்பட்ட ஆட்சியரும் அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காததால் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டின. அந்த வகையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கைக் கோரி, அதிமுக பெண் வழக்கறிஞர் திரிசூலி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் கலெக்டர் புகார்

அந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் புகார் கொடுக்காமல் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி அன்றைய தினமே தனது புகாரை கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு படி விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார்.

அருள் விக்னேஷிடம் விசாரணை

இதையடுத்து அருள் விக்னேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அது போல் சிருஷ்டி சிங் ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்திற்கு சென்ற பெண் ஆட்சியர், அங்கு வாக்குமூலம் அளித்திருந்தார்.

கடலூர் சிறையில் அருள் விக்னேஷ்

இதையடுத்து எப்படியும் எம்எல்ஏ கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி கடந்த 27ஆம் தேதி இரவு 7 மணியளவில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஐபிஎஸ் அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கோரி மனு

இந்த நிலையில் எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஜாமீன் கோரி கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீது டிசம்பர் 1 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+