இப்போ தமிழ்நாடு அரசியல் சரி இல்லை.. முதல்வர் விஜய்யை செய்வது சரியா? நெப்போலியன் பேட்டி
சென்னை: நடிகர் நெப்போலியன் சில வருடங்களாகவே சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். இப்போ மீண்டும் அவரே ஒரு படத்தை இயக்கி நடித்தும் இருக்கிறார். இந்த நிலையில் இப்போது படத்தின் பிரமோஷனுக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் அவரிடம் அரசியல் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் முதல்வர் விஜய்யை அட்டாக் செய்வது போலவே பேசி இருக்கிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் நெப்போலியன் பல வருடங்களாக அரசியலிலும் இருந்திருக்கிறார். 16 வயதிலேயே தனது மாமா கே என் நேருவுக்கு உதவியாளராக தனது வேலையை தொடங்கிய நெப்போலியன் ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இப்போது அரசியல் மற்றும் சினிமா இரண்டையும் விட்டு விலகி தனது தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்த நெப்போலியன் மீண்டும் சென்னைக்கு வந்த இடத்தில் தமிழ்நாட்டு அரசியலின் தற்போதைய நிலை குறித்து பேசி இருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் பேட்டி
இந்த பேட்டியில் அவர் பேசும்போது, "இப்போ தமிழ்நாட்டின் அரசியல் எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை. மனநிறைவாக இல்லை. நான் இப்போ அமெரிக்கா சிட்டிசன் ஆகிவிட்டேன். வெளிநாட்டுக்காரன் என்பது மாதிரிதான் என்னுடைய பார்வை இருக்கிறது. இந்தியா வந்தால் இங்கே 2 வாரம் இருப்பேன். அதனால் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நான் பார்ப்பதில்லை. என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
6 மாத ஆட்சி
நான் பார்க்கும் இடங்களில், பேசும் இடத்தில், மக்கள் சொல்வதை வைத்து தான் நான் இதை சொல்கிறேன். கடந்த 6 மாதமாக திருப்தியாக இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு நிறைய விஷயங்களை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யவில்லை என்று மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை கேட்கும் போது எனக்கு சங்கடமாக இருக்கிறது. நம் சினிமாக்காரர் அரசியலுக்கு வந்திருக்கிறார், வந்த நோக்கம் என்ன? மக்களுக்கு செய்ய வேண்டும் என்பதுதான். அதை முழுமையாக கவனமாக இருந்து செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என்று அவர் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
நெட்டிசன்கள் விவாதம்
உடனே நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? அவர்கள் தங்கள் பங்குக்கு நெப்போலியனை வசைபாட தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே விஜய் மீது நெப்போலியனுக்கு கோபம் இருக்கிறது, அதை அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். போக்கிரி பட சூட்டிங் சமயத்தில் விஜய் தன்னிடம் கோபமாக பேசிவிட்டார் என்று நெப்போலியன் சொன்ன பேட்டியை இப்போ மீண்டும் தோண்டி எடுத்து அந்த கோபம் இன்னும் நெப்போலியனுக்கு போகவே இல்லை, அதனால்தான் நெப்போலியன் இப்படி பேசுகிறார் என்று சொல்லி வருகின்றனர்.
ஒரு சிலரோ, நெப்போலியன் சொல்வதும் சரிதான். தமிழகத்தில் மாற்றம் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இதற்கு முன்பு திராவிட கட்சிகள் ஆட்சி எப்படி இருந்தததோ அதே தான் இப்போதும் தொடர்கிறது, எந்த மாற்றமும் இல்லை என்றும் மக்கள் நொந்து கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே இப்போ நெப்போலியன் பேசிய பேட்டி இணையத்தில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.




Click it and Unblock the Notifications
