ஓடுதளத்தை நெருங்கிய விமானம்.. கடைசி நொடியில் அலறிய ஏர்போர்ட் அதிகாரி! திடீரென பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, தரையிறங்க முயன்ற விமானத்தை கடைசி நேரத்தில் தரையிறங்கும் முயற்சியை கைவிட்டு மீண்டும் பறக்க உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

எப்போதுமே உலகின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். இந்த நில அதிர்வுகள் சில நேரங்களில் பேரழிவை ஏற்படுத்துகிறது. டெக்டானிக் பிளேட்கள் நகர்வதால் தான் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இருப்பினும், பல நேரங்களில் நில அதிர்வுகள் குறைவாக இருப்பதால் மோசமான பாதிப்புகள் ஏற்படாமலேயே இருந்துவிடுகிறது.

America Earthquake

நிலநடுக்கம்

இதற்கிடையே அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா கடல் பகுதியில் 5 ரிக்டரில் நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது நிலநடுக்கத்தை உணர்ந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, விமானத்தை தரையிறங்க வேண்டாம் என அறிவுறுத்தினார். தரையிறங்கும் முயற்சியை கைவிட்டு மீண்டும் பறக்க உத்தரவிட்டார். இதனால் ஓடுதளத்திற்கு மிக அருகே வந்த விமானம் மீண்டும் பறக்க தொடங்கியது.

நேற்று சனிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸின் 1972 என்ற விமானம் தரையிறங்க வந்து கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, விமானிக்கு அவசரமாக உத்தரவு பிறப்பித்தார்.

நில அதிர்வு

நிலஅதிர்வு இருப்பதால் விமானத்தை தரையிறக்காமல் மேலே செல்லுமாறு அந்த அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். அப்போது அந்த அதிகாரி, "மீண்டும் மேலே செல்லுங்கள். மீண்டும் மேலே செல்லுங்கள். இங்கு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது" பதற்றத்தோடு சொல்கிறார். அதிகாரியின் இந்த அவசர உத்தரவை கேட்ட விமானி, தரையிறங்கும் முயற்சியை கைவிட்டு விமானத்தை மீண்டும் மேலே இயக்கினார். நிலநடுக்கத்தால் விமான நிலையத்தின் சில பகுதிகள் அதிர்ந்து கொண்டிருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்க பூகம்பம்

அமெரிக்காவில் உள்ளூர் நேரப்படி காலை சுமார் 9.30 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவின் மன்ஹாட்டன் பீச் கடற்கரையிலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் கடலுக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலும் எதிரொலித்தது. அங்குள்ள ஒரு முனையத்தின் கண்ணாடி ஜன்னல்கள் அதிர்வால் உடைந்து சிதறின. விமான நிலையத்துக்குள் பதிவான காட்சிகள், நிலநடுக்கத்தின்போது கட்டடம் அதிர்ந்ததையும் கண்ணாடிகள் உடைந்ததையும் காட்டுகின்றன.

இருப்பினும், நிலநடுக்கத்தால் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில், நிலநடுக்கம் காரணமாக தரையிறங்கவிருந்த விமானம் கடைசி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+