திமுக தவெக வேஸ்ட்.. திருப்பரங்குன்றம் பிரச்சனை.. சீமான் சொன்னாரு பாருங்க ஒரு ஐடியா

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி திருப்பரங்குன்றம் கோயில் மலையின் தீபத்தூணில் நேற்று மாலை தீபம் ஏற்றப்பட்டது. அஇந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக நிலைப்பாட்டை தவெக பின்பற்றியதாக விமர்சமானது. மறுபக்கம் தவெக சட்டப் போராட்டம் சரியாக நடத்தாமல் இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டதாக திமுக விமர்சித்தது. திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக, தவெக இருவருக்கும் குட்டு வைத்து சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Seeman

தூத்துக்குடியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது. திருப்பரங்குன்றம் மலையில் விளக்கு ஏற்றுவதில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அரசே பாதுகாப்பு கொடுத்து நீங்கள் விளக்கு ஏற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் தர்காவில் வழிபட்டு கொள்ளுங்கள் என்று கூறியிருந்தால் சுமூகமாக முடிந்திருக்கும்.

திமுக தவெகவுக்கு குட்டு

இதை திமுக ஆட்சியிலேயே சரி செய்திருக்கலாம். அவர்கள் விட்டுவிட்டனர். முருகனுக்கு விளக்கு ஏற்ற தானே கேட்கிறார்கள். இதில் யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிட போகிறது. யாருக்கும் எந்த பிரச்சனையில்லாமல் அவரவர் வழிபடுங்கள், விளக்கு ஏற்றுங்கள். வேண்டுமானால் தர்காவில் கிடாய் வெட்டி ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லையே. ஒவ்வொரு ஆண்டும் பிரச்சனை தொடர வழிவகுத்துவிட்டனர்.

திமுக ஆட்சியிலும் சரி, தற்போதுள்ள தவெக ஆட்சியிலும் சரி, திருப்பரங்குன்றம் விவகாரம் சாதாரணமாக கையாண்டிருக்க வேண்டிய ஒன்று. உன் மதம் சிறந்தது வழிபடு. என் மதமும் சிறந்தது வழிவிடு. இவ்வளவு தான் கோட்பாடு. விளக்கு ஏற்றவும், தர்காவில் வழிபடவும் பாதுகாப்பு வழங்கியிருந்தால் போதும். அதை செய்யாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சனை உருவாகிக் கொண்டே இருக்கும்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவ்வளவு அழுத்தம் கொடுத்த பிறகு தான் நடவடிக்கை எடுப்பார்களா. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இப்படி என்றால், சாதாரண ஆட்களுக்கு எப்படி என்கிற அச்சம் வராதா. ஒரு அமைச்சர் ஐபிஎஸ் அதிகாரியை இரவு வீட்டிற்கு வாங்க என்கிறார். இதையெல்லாம் எப்படி எடுத்து கொள்வது என தெரியவில்லை. நாங்கள் வந்தால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தனர்.

சின்ன சின்ன குழந்தைகள் கூட காணாமல் போகிறது. நாம் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறோமா என்கிற கேள்வி வருகிறது. போதையில் சின்ன சின்ன பசங்க, காவலர்களையே வெட்டுவதை காணொலியில் பார்க்கிறாம். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்கள் மற்றும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க முடியும். இது மிகவும் கொடுமையானது. ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+