திடீரென அலறியடித்துக்கொண்டு வீதிக்கு வந்த மக்கள்! அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 5.0 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் ஜன்னல் உடைந்து நொறுங்கியிருக்கின்றன.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மன்ஹாட்டன் கடற்கரைக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள மன்ஹாட்டன் கடற்கரையிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது பூமிக்கு அடியில் கிட்டதட்ட 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பிரதான நிலநடுக்கத்தை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே 2 சிறிய பின் அதிர்வுகள் ஏற்பட்டன. காலை 9.34 மணிக்கு ஹெர்மோசா கடற்கரை அருகே ரிக்டர் 3.0 அளவிலும், காலை 9.35 மணிக்கு மன்ஹாட்டன் கடற்கரை அருகே 2.8 ரிக்டர் அளவிலும் நில அதிர்வுகள் பதிவாகின.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையோ அல்லது அச்சுறுத்தலோ எதுவும் விடுக்கப்படவில்லை. பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள சுமார் 25,000 மை நீளமுள்ள பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் அதிக நிலநடுக்க மற்றும் எரிமலை செயல்பாடுகள் கொண்ட பகுதியிலேயே இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் பசிபிக் புவித்தட்டும், கலிபோர்னியாவுக்கு அடியில் உள்ள வட அமெரிக்க புவித்தட்டும் உரசிக்கொள்வதால் இத்தகைய நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
