கலெக்டரை கல்தூணுக்கு சட்டி தூக்க வைத்ததுதான் விஜய்யின் நிர்வாகத்திறன்! முக ஸ்டாலின் அட்டாக்
சென்னை: ஒரு மாவட்ட ஆட்சியரை கல்தூணுக்கு எண்ணெய் சட்டி தூக்க வைத்ததுதான் முதல்வரின் நிர்வாக திறன் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விஜய்யை விளாசியுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும், நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று சரியாக மாலை 5 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிஆர்பிஎப் படை வீரர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு பாதுகாப்பு அளித்த நிலையில், இன்று தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீப திருநாளன்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட போது, மதுரை ஆட்சியர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்று ஆட்சியர் தீபம் ஏற்றுவதற்காக கொப்பரையை தன் கையால் சுமந்து சென்றார். இந்த நிலையில்தான், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், தவெக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
'Comedy Show Performer' முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!.. என்று பதிவிட்டுள்ளார்.




Click it and Unblock the Notifications
