அதுக்குள்ள திமுக-பாஜக கூட்டணி என வதந்தி! ஓடி வந்து மறுத்த தங்கம் தென்னரசு! எக்காலத்திலும் இல்லையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதவாத சக்தியான பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பதே திமுக தலைவரின் நிலைப்பாடு என மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதால், பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பது பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாட்டில் நாடாளுமன்ற எண்ணிக்கையை குறைக்க சதி செய்த பாஜக-வை திமுக தான் விடாமல் போராடி என்று U turn அடிக்க வைத்தது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட அனைத்தும் Fair delimitation இல் இருந்து No Delimitation க்கு வந்துள்ளார்கள். அப்படியானால் U turn அடித்தது யார்?

DMK Will Never Ally with BJP Says Former Minister Thangam Thennarasu Amid Alliance Speculation

இது தமிழ்நாட்டின் மாநில உரிமைக்கு வந்த முக்கியமான விஷயம். இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே சீராக 50 சதவீதம் கூடுதல் தொகுதிகளை பெற முடிந்துள்ளது. இது அனைத்து மாநிலங்களும் கொண்டாட வேண்டிய வெற்றி இந்த வெற்றி உறுதி செய்தவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்." என்றார்.

தொடர்ந்து, திமுக மீது முன்வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களுக்கும் பதில் அளித்தார் தங்கம் தென்னரசு. இந்தியா கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால்தான் இந்த மசோதாவை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "அரசியல் கூட்டணிகளுக்கும் இந்திய ஜனநாயகத்தையே பாதுகாக்கும் எத்தகைய முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் இந்தியா கூட்டணியில் இருந்த போது ஏப்ரல் மாதமே fair delimitation எனும் முடிவு எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று தான் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினார்.

கூட்டணி என்பது அரசியல். இந்த நிலைப்பாடு என்பது தமிழ்நாட்டின் குரலை மக்களவையில் பிரதிபலிக்க எந்த வகையிலும் குறைத்து விடாமல் இருக்க நமது உரிமையை காக்கும் முயற்சி." என்றார்.

திமுகவின் இந்த நிலைப்பாடு பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான ஏற்பாடா? என்ற கேள்விக்கு, "இல்லை. எக்காலத்திலும் மதவாத பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எங்கள் தலைவரின் நிலைப்பாடு. தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் திமுகவின் நிலைப்பாட்டுக்கும் கூட்டணி அரசியலுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை" என்றார்.

மேலும், 7.18 சதவீதம் பங்கு எப்போதும் குறைய கூடாது. 39 ல் இருந்து 59 ஆக எம்.பிக்கள் எண்ணிக்கை உயரும். Fair delimitation க்கு மாற்றாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேறு எதையாவது சொன்னார்களா? மற்ற வட மாநிலங்களில் பாஜகவை சந்திக்க காங்கிரஸ் கட்சிக்கு தெம்பு இல்லை. ஆனால் திமுக-விற்கு இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தமிழ்நாட்டை மக்களின் மீது அக்கறை இல்லை. வரக்கூடிய ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு உடனடியாக என்ன ஆபத்து வரப்போகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடக்கவில்லை. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எப்போது வேண்டுமானாலும் delimitation கொண்டு வரலாம். பாஜக எந்த வடிவத்தில் இந்த மசோதாவை கொண்டு வர நினைத்தாலும் கொண்டு வரலாம். மக்களவை தொகுதிகள் 59 ஆக உயரலாம் என்பதை விட, எண்ணிக்கை கூடுகிறதா? குறைகிறதா? என்பது தான்.‌

நீண்ட கால பிரச்சனையை உருவாக்கக் கூடிய ஒரு விஷயத்தை ஆய்ந்து இந்த முடிவு எடுத்துள்ளோம். எங்கள் இலக்கு தெளிவாக இருக்கிறது. இந்த ஆபத்து எதிர்காலத்தில் வரும் போது அப்போது திமுக என்ன செய்திருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்பார்கள். அதனால் முன்னெச்சரிக்கையாக இந்த ஆதரவு.

மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உயர்கிறது. நமது உரிமையை விடக்கூடாது என்பது தான் முக்கியம்" எனத் தெரிவித்தார் தங்கம் தென்னரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+