டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு! மாறும் கணக்கு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக அதிரடியாக தனது ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தது. இது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

சூழல் இப்படி இருக்கையில் தற்போது டெல்லியில் அமித்ஷாவை திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புக்கு பிறகு திமுக எம்பிக்கள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
