இழுத்துப் பிடித்து கன்னத்தில் முத்தம்.. திருப்பரங்குன்றத்தில் CRPF வீரர்களிடம் அன்பை காட்டிய பக்தர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட CRPF வீரர்களுக்கு உற்சாக மிகுதியில் முத்தமிட்டு பக்தர் ஒருவர் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (நவம்பர் 28) சரியாக மாலை 5 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிஆர்பிஎஃப் படை வீரர்கள் திருப்பரங்குன்றம் மலைக்கு பாதுகாப்பு அளித்த நிலையில், இன்று தீபம் ஏற்றப்பட்டது.

Thirupparankundram Deepam Overjoyed Devotee Kisses CRPF Personnel in Emotional Moment

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டதுடன், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும் உத்தரவிட்டனர்.

மேலும், திருக்கோயில் அறங்காவலர் குழுவின் செயல்பாடுகளை இடைநிறுத்தி, கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரை நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புக்குப் பிறகு தீபம் ஏற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி கோயம்புத்தூரில் இருந்து வரவழைக்கப்பட்ட 130-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையின் விரைவு அதிரடிப் படையினர் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மலை அடிவாரம், மலைக்குச் செல்லும் பாதைகள், மலை உச்சி மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, இன்று மாலை 5 மணியளவில் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பக்தர்கள் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்று திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் கூடியிருந்த பக்தர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். முதல் முறையாக, மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருப்பரங்குன்றம் மலை முழுவதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மலையில் இருந்து இறங்கி வந்த நிலையில், பக்தர்கள் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்தினர். தீபம் ஏற்றப்பட்ட உற்சாகத்தில் இருந்த பக்தர் ஒருவர், சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கன்னத்தில் முத்தமிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+