எச்.ராஜாவுக்கு ஒரு நீதி.. மதுரை ஆட்சியருக்கு ஒரு நீதியா? வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை ஆட்சியர் மன்னிப்பு கோரியிருந்தும் அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதை குறிப்பிட்டிருந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், எச்.ராஜாவுக்கு ஒரு நீதி? மதுரை ஆட்சியருக்கு ஒரு நீதியா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, "பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் 30 வருஷம் பொறுத்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் வழக்கில் 3 நாட்கள் கூட பொறுமை காக்காதா?

Tiruparankundram Case

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு கொடுத்தார்கள். தீர்ப்பை தொடர்ந்து பெண்கள் கோயிலுக்குள் சென்றார்கள். பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தவுடன் அங்கிருக்க கூடிய தலைமை தந்திரி தீட்டு கழித்திருக்கிறார். தீட்டு என்று சொல்லக்கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால், அவர்கள் அதற்கான சடங்குகளை செய்தார்கள். இதற்கு எதிராக கடந்த 2019 நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று வரை இந்த வழக்கின் மீது எந்த நகர்வும் இல்லை. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், திருப்பரங்குன்றம் வழக்கில் 3 நாட்கள் பொறுக்க முடியாதா? உத்திரபிரதேசத்திற்கு ஒரு நீதி.. கேரளாவுக்கு ஒரு நீதி.. தமிழ்நாட்டுக்கு ஒரு நீதியா? எல்லா நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளையும் ஒரே மாதிரி தானே பார்க்க வேண்டும்? சட்டம்-ஒழுங்கு, பொது அமைதியை பாதுகாக்க வேண்டியது மாநிலத்தினுடைய பொறுப்பு. இதனை அப்படியே மத்திய படைகளிடம் மாற்றி கொடுக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு பணியில் எவ்வளவு போலீசார் ஈடுபட்டார்கள்? எத்தனை எஸ்பிகள்? எத்தனை டிஜிபிகள்.. நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி பாதுகாப்பில் குவிக்கப்பட்டிருந்தனர் என்கிற விவரங்களை நீதிமன்றத்தில் கொடுத்திருந்தார்கள்.

திருப்பரங்குன்றத்தில் சங்பரிவார் அமைப்புகள் நடத்திய பிரச்சினையை தவிர, வேறு எந்த பிரச்சினையும் நடக்கவில்லை. காவல்துறை பாதுகாப்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால்தான் CRPF வசம் பாதுகாப்பு ஒப்படைக்க முடியும். ஆனால், இது பற்றி உத்தரவில் எதுவும் சொல்லாமல்.. CRPF-இடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு காவல்துறை சார்ந்த பிரச்சினை அல்ல, தமிழ்நாட்டின் 8 கோடி மக்களை அவமதிக்கும் நடவடிக்கையாகும். எப்படி இழிவுபடுத்தும் செயலை செய்வதற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சர்வாதிகாரி என்று அருண் ஜெட்லி சொல்லியிருந்தார். அவர் மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது? துக்ளக் குருமூர்த்தி கூட நீதிபதிகளை விமர்சித்து இருந்தார். இப்போது உள்ள நீதிபதிகள் எல்லாம் அரசியல்வாதிகளின் கை, கால்களை பிடித்து வந்து விடுகிறார்கள் என்று கூறியிருந்தார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது நீதிமன்றம்? அவரை தூக்கில் போட்டு விட்டீர்களா?

ஹை கோர்ட்டை பற்றி விமர்சித்திருந்தார் எச். ராஜா. அவர் மன்னிப்பு கேட்டவுடன் விட்டு விட்டீர்கள். மதுரை ஆட்சியரும் மன்னிப்பு கேட்டார். அதை ஏற்றுக் கொண்டு விட்டு விட வேண்டியது தானே? எச் ராஜாவுக்கு ஒரு நீதி? மதுரை கலெக்டருக்கு ஒரு நீதியா? உச்ச நீதிமன்றம் எல்லோருக்கும் சமமானது என்று தானே சொல்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+