மனிதர்கள் வாழ்நாள் 1,400 ஆண்டுகளாக அதிகரிக்கும்! ஏஐ செய்யப்போகும் சம்பவம்.. நிபுணர் கணிப்பு
ஸ்டாக் ஹோம்: சூப்பர் இன்டெலிஜென்ட் செயற்கை நுண்ணறிவை வெற்றிகரமாக உருவாக்குவதன் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து பாட்காஸ்ட் ஒன்றில் ஆக்ஸ்போர்டு முன்னாள் பேராசிரியர் நிக் போஸ்ட்ரோம் கூறியுள்ளார். அதாவது, மனிதர்களின் வாழ்நாள் 1,400 ஆண்டுகள் வரை உயரக்கூடும் என்று அவர் வெளியிட்டுள்ள கணிப்பு சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. உண்மையில் இது சாத்தியமா? என்ற விவாதம் அதிகரித்து இருக்கக் கூடிய நிலையில், அவரது கணிப்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்கள் பல மணி நேரம் செய்த வேலையை வெறும் சில நிமிடங்களில் ஏஐ பாட்கள் செய்து முடித்துவிடுகின்றன. ஐடி துறை மட்டுமின்றி மருத்துவத்துறையிலும் ஏஐ பெரும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

மனிதர்கள் வாழ்நாள் 1,400 ஆண்டுகளாக உயரும்
சிக்கலான அறுவை சிகிச்சை முதல் நோய்களை முன்கூட்டியே கண்டறியும் திறன் உள்பட மருத்துவத்துறையில் பல மாற்றங்கள் ஏஐயால் நிகழப்போகிறது என்பதே அவர்களின் வாதமாக உள்ளது. இதற்கிடையே ஏஐ மருத்துவத்தால் மனிதர்கள் வாழ்நாள் 1,400 ஆண்டுகளாக உயரும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நிக் போஸ்ட்ரோம் கணித்துள்ளார். சூப்பர் இண்டெலிஜன்ஸ்க்கான உகந்த நேரம் என்ற ஆய்வுக்கட்டுரையை அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், நிக் போஸ்ட்ரோம் கூறியிருப்பதாவது:- மனிதர்களுக்கு வயதாகும் செயல்முறை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நமது சராசரி ஆயுட்காலம் சுமார் 1,200 முதல் 1,400 ஆண்டுகள் வரை இருந்திருக்கும் என்று நான் கருதுகிறேன்" என்றார். 1,400 ஆண்டுகள் என்பது தற்போது மனிதர்களுக்கு இருக்கக் கூடிய ஆயுட்காலத்தை விட 1,400 ஆண்டுகள் அதிகம் ஆகும். உலக வரலாற்றில் மிகவும் வயதான நபராக பதிவு செய்யப்பட்டது 122 ஆண்டுகள் ஆகும்.
செல்களின் சிதைவைச் சரிசெய்து..
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெயன்னே கல்மேட் என்பவர் 122 ஆண்டுகள் 164 நாட்கள் உயிர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1,400ஆண்டுகள் என்பது ஏதோ ஹாலிவுட் அறிவியல் புனைக்கதை படங்களில் நடப்பது போன்று தோன்றலாம். ஆனால், உண்மையில் சில கணித கோட்பாடுகளை வைத்து இவர் இந்த கருத்தை முன்வைத்து இருக்கிறார்.
அதாவது, மனிதருக்கு வயதாகும் நடைமுறையில் ஏற்படும் செல்களின் சிதைவைச் சரிசெய்து, வயோதிகத்தை முற்றிலுமாகத் தடுக்கும் மருத்துவ சிகிச்சைகளை எதிர்கால ஏஐ தொழில்நுட்பம் கண்டறியும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம், வயோதிகம் தடுக்கப்பட்டு, ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் சுமார் 1,429 ஆண்டுகளாக இருக்கும் என்று கணித்துள்ளார்.
ஏஐயால் சாத்தியம்
வளர்ந்த நாடுகளில் இளைஞர்களின் வருடாந்திர இறப்பு விதகம் ஆண்டுக்கு 0.05 முதல் 0.08 சதவிகிதமாக உள்ளது. எனவே வயது ஆவது தடுக்கப்பட்டால் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 1 ÷ 0.0007 என கணக்கிடும் போது, 1,429 ஆண்டுகளாக இருக்கும் எனக் கூறுகிறார். அதேநேரத்தில் இது ஒரு கற்பனையான கணித கணக்கீடு ஆகும். எதிர்காலத்தில், இப்படியான ஒரு சூழல் ஏஐயால் சாத்தியம் என்பதேயே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.




Click it and Unblock the Notifications
