திமுக பாஜக கூட்டணியா? மொத்த கட்சிகளும் மிரண்டு போற மாதிரி நயினார் சொன்ன பதிலை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுக - பாஜக கூட்டணி தொடர்பாக யூகங்கள் பரவி வரும் சூழலில் அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Nainar Nagendran Responds to Speculation Over Possible DMK BJP Alliance

இந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று மாலை சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான விவரங்களையும், மசோதாவிற்கு ஆதரவளிக்க உள்ள விவரங்களையும், மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக எம்.பிக்கள், மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த திமுக, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதன் மூலம், பாஜக கூட்டணிக்குச் செல்வதற்கு ஆயத்தமாகி விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. திமுக - பாஜக கூட்டணி அமைக்கப்போவதாக யூகங்கள் றெக்கை கட்டிப் பறந்து வருகின்றன.

ஆனால், திமுக இந்த விமர்சனத்தை மறுத்துள்ளது. எக்காலத்திலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதே திமுக தலைவர் ஸ்டாலினின் நிலைப்பாடு என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். ஆனால், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனோ, மழுப்பலாகப் பேசியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பது குறித்த கேள்விக்கு, "எந்தக் காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுத்துள்ளார்கள். அது இந்த நாட்டிற்குச் செய்யும் நல்ல செயல்." என்றார்.

திமுக - பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அது முருகப்பெருமானின் கையில் உள்ளது" என பதில் அளித்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகியதும், இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது திமுக. தற்போது தேசிய அளவில் அணி சேராமல் இருந்து வருகிறது திமுக. எனவே, பாஜகவை நோக்கி திமுக நகரும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் கூட்டணி பற்றிய யூகத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் மழுப்பலாக அதே நேரம், விருப்பத்தை தெரிவிக்கும் வகையிலும் பதில் அளித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+