மக்களவை சிறப்பு அமர்வில்.. அறிமுகப்படுத்தப்படும் 3 புதிய மசோதாக்கள்! பாஜகவின் பலே பிளான்!
டெல்லி: நவ. 30 முதல் டிச. 3 வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வில், தொகுதி மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான 3 முக்கிய மசோதாக்களை மக்களவையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1. அரசியலமைப்பு (132 வது திருத்தம்) மசோதா 2026. மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்துவதற்கும், 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்துவதற்கும் அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கம்.

மக்களவையில் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550 லிருந்து 850 ஆக உயர்த்த வழிவகை செய்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் 50% தொகுதிகளை உயர்த்தவும், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட பங்கீட்டு விகிதத்தை 2051 ஆம் ஆண்டு வரை மாற்றாமல் அப்படியே தக்கவைக்கவும் இது வழிவகை செய்கிறது.
2. எல்லை நிர்ணயம் மசோதா, 2026. அதிகரிக்கப்பட உள்ள புதிய தொகுதிகளுக்கு ஏற்ப மாநிலங்களுக்குள் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்கான நடைமுறைகளை இது வகுக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைக்க இந்த சட்டம் வழிவகை செய்யும். சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை மாற்றி அமைப்பது, பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு எந்தெந்த தொகுதிகளில் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதை இந்த ஆணையும் தீர்மானிக்கும்.
3. யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்தம் மசோதா 2026. மாநிலங்களைப் போலவே யூனியன் பிரதேசங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும், அங்குள்ள சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை செயல்படுத்தவும் தொடர்புடைய சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதை இந்த மசோதாவை நோக்கமாகும்.
இந்த 3 மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நவம்பர் 30 அன்று மக்களவையையும், டிசம்பர் 2 அன்று மாநிலங்களவையும் கூடுகின்றன. டிசம்பர் 3ம் தேதி வரை இந்த சிறப்பு அமர்வு நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications
