நிலநடுக்கத்தில் சிக்கிய ஏர்போர்ட்! தரையிறக்க வந்து.. அப்படியே டேக் ஆஃப் ஆன விமானம்! வீடியோவை பாருங்க
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கம் காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம், அப்படியே மீண்டும் டேக் ஆஃப் எடுத்து கிளம்பியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மன்ஹாட்டன் கடற்கரை பகுதிக்கு அருகே ரிக்டர் அளவில் 5.0 என நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தின் தாக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் வரை எதிரொலித்தது.

நிலநடுக்கம் காரணமாக தெற்கு கலிபோர்னியா முழுவதும் செல்போன்களுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு பலமாக உணரப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் அருகே இருந்த கேமராக்கள் பயங்கரமாக குலுங்கின. இதிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்கள் நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணர்த்துகின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானங்களுக்கு எச்சரிக்கை கொடுத்தனர். இதையடுத்து தரை இறங்க வந்த விமானம் ஒன்று, ஓடுபாதைக்கு நெருக்கமாக வந்து.. தரையிறங்காமல் மீண்டும் வானில் பறந்து சென்றது. இது தொடர்பான வீடியோக்கள் பரவலாக ஷேராகி வருகின்றன.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல.. பெரிய அளவிலான கட்டிட சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. விமான நிலையத்தின் மேற்கூரை மட்டும் உடைந்து விழுந்திருக்கிறது.
❗️ California ROCKED by 5.2M EARTHQUAKE near Manhattan Beach — ‘SEVERE’ ALERTS SENT OUTAIRPORT CAMERA VIOLENTLY SHAKES as DRIVERS HONKPILOTS WARNED by AIR TRAFFIC CONTROL of a ‘PRETTY BIG EARTHQUAKE’ https://t.co/xV1g0r1Bn5
— RT (@RT_com) November 28, 2026
நிலநடுக்கத்தின் போது விமானங்களை தரை இறக்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாக இருந்தாலும்.. பாதுகாப்பு காரணங்களுக்காக அவை உடனடியாக தரையிறக்க அனுமதிக்கப்படுவதில்லை. நிலநடுக்கத்தால் ஓடு பாதையில் விரிசல்கள், பள்ளங்கள் ஏற்பட்டிருக்கலாம். இதனை சோதனையிடாமல் விமானத்தை தரை இறக்கினால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தரையிறங்க உதவும் ரேடார், விளக்குகள் மற்றும் ஐஎம்எல் கருவிகள் அதிர்வினால் பழுதடைந்து இருக்கலாம் அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கலாம். உயரமான கட்டுப்பாட்டு அறைகளில் இருப்பவர்கள், நிலநடுக்கத்தின்போது பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானங்களை வழிநடத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படும். இந்த காரணங்களுக்காக தான் நிலநடுக்கத்தின்போது விமானங்களை தரையிறக்க பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை.


Click it and Unblock the Notifications
