Gold Rate Today: திடீரென மாறிய டிரெண்ட்.. இறங்கும்னு பார்த்தால் எகிறுதே தங்கம்.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரியும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நிலையில், அது யூடர்ன் போட்டு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கான காரணம்.. பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து குறைந்து வந்தது. அமெரிக்கா ஈரான் போர் ஆரம்பித்தது முதலே சர்வதேச அளவில் நடந்த மாற்றங்களால் தங்கம் விலை சரிந்தது. இடையில் தங்கம் விலை ஓரிரு வாரங்கள் உயர்ந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக தங்கம் விலை சரிந்தே வந்தது.

சர்வதேச சந்தை
இப்போது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,651 டாலராக உள்ளது.. ஒரு கட்டத்தில் 3 சதவீதம் வரை அதிகமாக உயர்ந்தது. இந்த வாரம் மட்டும் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 3 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க டிசம்பர் மாத கோல்ட் ஃபியூச்சர்ஸ் விலையும் கணிசமாக உயர்ந்தே உள்ளது. சில வாரங்களாகவே சரிந்த தங்கம் விலை இப்போது யூடர்ன் போட்டுள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததால், அந்நாட்டு மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அடுத்த மாதமும், 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் தங்கத்தின் விலை சரிந்தது.
என்ன நடக்கும்
தற்போது விலை குறைந்ததை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்க தொடங்கியதால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இருப்பினும், இதை வைத்து கொண்டு தங்கத்தின் டிரெண்ட் மாறிவிட்டது என சொல்லிவிட முடியாது. ஏற்கெனவே தங்கத்தை விற்றவர்கள் மீண்டும் வாங்குவதாலும், சிலர் முதலீடுகளை அதிகரித்துள்ளதாலும் இந்த மாற்றம் நடந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இதனால் டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கத்தை மற்ற நாட்டு முதலீட்டாளர்கள் வாங்குவது அதிக செலவாகிறது. மேலும், அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் வருவாயும் உயர்ந்துள்ளது. பொதுவாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கும்போது, வட்டி வருவாய் தராத தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் குறையும். ஏனெனில், முதலீட்டாளர்கள் தங்கத்துக்கு பதிலாக வட்டி வருவாய் கிடைக்கும் பத்திரங்கள் உள்ளிட்ட முதலீடுகளை தேர்வு செய்வார்கள். இப்போதும் அதுவே நடந்துள்ளது.
என்ன நடக்கிறது
தங்கம் ஒரு அவுன்ஸ் 5,000 டாலரை, அதாவது இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ரூ.15,000ஐ தாண்டியது போல, மீண்டும் எட்ட வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அடுத்த ஆண்டின் முதல் பாதியிலேயே அது நடக்காது என்றும் வாவ்டா கூறியுள்ளார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அடுத்தாண்டு முதல் பாதி வரையிலும் கூட தங்கம் விலை சரியும். அதன் பிறகு உயர வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் இப்போது தங்கம் விலை உயர்வது தற்காலிகமானது என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
28-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ. 93.760
27-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800
26-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,320
25-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,360
24-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.93,720
23-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800
22-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.92,800
21-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.91,720



Click it and Unblock the Notifications
