மாட்டு சிறுநீர் குடித்து.. காயத்ரி மந்திரம் சொன்ன நர்கிஸ்.. இச்சா தேவியாக மாறியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப் பிரதேசத்தில் காதலனைக் கல்யாணம் செய்வதற்காக இளம்பெண் ஒருவர் இந்து மதத்துக்கு மாறியுள்ளார். நர்கிஸ் என்ற தனது பெயரையும் இச்சா தேவி என மாற்றிக்கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல், இப்போது கல்யாணத்தில் முடிந்துள்ளது. ஆனால், இதற்காக அவர் கடந்து வந்த பாதைதான் சுவாரசியமானது.. அதைப்பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம், ஆம்லா பகுதியில் உள்ள மஹ்மூத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நர்கிஸ். அதே கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் காஷ்யப் என்பவருடன் இவருக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

Nargis Akash Marriage

நர்கிஸ் - ஆகாஷ்

முதலில் நர்கிஸ்தான் ஆகாஷுக்கு மெசேஜ் அனுப்பி பேசியுள்ளார். நாளடைவில் ஆகாஷைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அவரிடமே சொல்லியுள்ளார். ஆகாஷும் சம்மதித்துள்ளார்.

ஆனால், நர்கிஸின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் 2 பேரும் ஒருமுறை டெல்லிக்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சினையால் ஆகாஷின் குடும்பத்தினர் நர்கிஸை மீண்டும் அவரது வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும், அவர் மீண்டும் ஆகாஷிடம் சென்றுள்ளார். இறுதியில் 2 பேரும் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இச்சா தேவியாக மாறியது ஏன்?

கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாகவே தனக்கு இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருந்ததாக நர்கிஸ் சொல்லியுள்ளார். யாருடைய கட்டாயமும் இல்லாமல் தனது விருப்பப்படியே இந்து மதத்துக்கு மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக பரேலியில் உள்ள மடிநாத் பகுதியில் இருக்கும் ஸ்ரீ அகஸ்திய முனி ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அங்கு பண்டிட் கே.கே. சங்க்தர் முன்னிலையில் மதம் மாறுவதற்கான சடங்குகள் நடந்துள்ளன.

அப்போது கங்கை நீர் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி சடங்குகள் செய்துள்ளனர். தொடர்ந்து நர்கிஸ் 3 முறை காயத்ரி மந்திரம் சொல்லியுள்ளார்.. இதன்பிறகு தனது பெயரை இச்சா தேவி என மாற்றிக்கொண்டுள்ளார்.

கங்கை நீர், கோமியம் குடித்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அனைவரும் இதைக் குடிக்க வேண்டும் என்றும் இச்சா தேவி சொல்லியுள்ளார். இதற்கு முன்பு கலீமா ஓதியிருந்ததாகவும், இப்போது அந்தப் பழைய நம்பிக்கைகளை கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

டும் டும் டும் கல்யாணம்

நர்கிஸ் 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். ஆகாஷ் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2 பேரும் நவம்பர் 25ம் தேதி நோட்டரி மூலம் உறுதிமொழிப் பத்திரம் தயாரித்துள்ளனர். மதம் மாறியது, கல்யாணம் செய்துகொண்டது தொடர்பான ஆவணங்களையும் காட்டியுள்ளனர்.

நவம்பர் 27ம் தேதி பரேலியில் உள்ள ஃபதேகஞ்ச் பச்சிமி ஆரிய சமாஜ் கோயிலில் கல்யாணம் நடந்ததற்கான சான்றிதழையும் காட்டியுள்ளனர். அதே நாளில் அகஸ்திய முனி ஆசிரமத்திலும் இந்து முறைப்படி கல்யாண சடங்குகள் நடந்துள்ளன.

இதனிடையே, நர்கிஸ் குடும்பத்தினரிடமிருந்து தங்களுக்கு கடுமையான உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக சொல்கிறார் ஆகாஷ்.. அதற்காகவே சொந்த கிராமத்தில் வசிக்காமல் இப்போது டெல்லியில் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் ஆகாஷின் குடும்பத்தினர் இச்சா தேவியை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொண்டு விட்டார்களாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+