"கந்தனுக்கு அரோகரா".. காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து முருகனை தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குமரகோட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் தான் கந்தபுராணம் அரங்கேற்றம் நடைபெற்றது. முருகப் பெருமான் சிறுவனாக வந்து பாம்பன் சுவாமிகளுக்கு வழிகாட்டி அருளியது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

Kumbhabhishekam

கும்பாபிஷேகம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டன. கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கின. நவம்பர் 27 ஆம் தேதி மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், நவம்பர் 28 ஆம் தேதி திரவிய ஹோமங்களும் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலையில் மகாபூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர், குருக்கள், தலைமை சிவாச்சாரியர் தலைமையில் 100 சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் புனித நீரை ஊற்றினர்.

கந்தனுக்கு அரோகரா..

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று கும்பாபிஷேகத்தின் போது விண்ணை முட்டும் அளவுக்கு முழக்கம் எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தென்னரசு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. முனிரத்தினம், முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். நாகராஜ், நீதிபதிகள் நவீன்துரை பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+