3 பைல்ஸ் மட்டுமல்ல.. இன்னும் நிறைய இருக்கு! திமுக ஊழல்களை அம்பலப்படுத்துவோம்! மரியா வில்சன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மரியா வில்சன், அவை குறித்து விரிவான தணிக்கை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், 3 பைல்ஸ்கள் மட்டுமின்றி, பல பைல்ஸ்கள் தங்களிடம் உள்ளதாகவும் அதில் இருந்து தப்பிக்கவே திமுக புதிது புதிதாக கதைகளை சொல்லி வருவதாகவும் சாடினார்.

நேற்றைய தினம் நெல்லையில் நடந்த ஆய்வு கூட்டம் ஒன்றில் நிதித்துறை அமைச்சர் மரியா வில்சன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மரியா வில்சன், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விளக்கமளித்தார். குறிப்பாக தமிழக முதலீடுகள் ஆந்திராவுக்கு செல்வதாக வந்துள்ள புகார் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

Maria Wilson

அமைச்சர் மரியா வில்சன்

இது தொடர்பாக அமைச்சர் மரியா வில்சன் மேலும் கூறுகையில், "அனைத்து துறைகளிலும் தவெக அரசு தொய்வில்லாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை திமுக மிக கடுமையாக விமர்சித்து வந்தாலும், மக்களிடையே எங்கள் அரசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நீங்கள் வரலாற்றைப் பார்க்க வேண்டும். அந்த வரலாறு இப்போது இருக்கும் Gen-Z தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. Gen-Z தலைமுறையினர் முதல்வர் விஜய்யை தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான அரசியல் தலைவராக பார்க்கிறார்கள்.

நிறைய பைல்ஸ் இருக்கு

தவெக அரசு எதை சொன்னாலும் முதலில் எதிர்ப்பது திமுகதான். 'ஊழல்' என்ற வார்த்தையே சொன்னாலே உடனே போர்க்கால அடிப்படையில் எதிர்ப்பார்கள். நீங்களே சட்டமன்றத்தில் பார்த்திருப்பீர்கள். இப்போது பல்வேறு துறைகளில் தணிக்கை செய்துள்ளோம். அனைத்து துறைக்கான தணிக்கைகளையும் முடித்துவிட்டு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அனுப்புவோம். சீக்கிரமே ஊழல் பட்டியலை வெளியிடுவோம்.. அதை பொறுத்து கொள்ள முடியாமல்தான் அவர்கள் சில கதைகளை கட்டமைக்கிறார்கள். இப்போது அவர்கள் யாருடன் மறைமுகமாக கூட்டணியில் இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது.

நாங்கள் துறை வாரியாக தணிக்கை செய்து வருகிறோம். அதில் சிக்குபவர்கள் எல்லாம் சாதாரணமான நபர்கள் இல்லை. வெறும் மூன்று பைல்ஸ் மட்டும் பட்டியலில் இல்லை, அந்த பட்டியல் மிக பெரிதாக போய்க்கொண்டே இருக்கிறது. மாநகராட்சிகளை எடுத்து கொண்டாலே மதுரை, கோவை, சென்னை என லிஸ்ட் தனித்தனியாக உள்ளது. தணிக்கை முழுமையாக முடிந்த பிறகு அனைத்தையும் வெளியிடுவோம்.

மூலதன முதலீடு

தமிழ்நாட்டில் மூலதன செலவு தங்கம் தென்னரசு கூறியுள்ளார். எது நெகட்டிவாக உள்ளதோ அதை மட்டும் அவர் பார்க்கிறார். கடந்த 6 மாதங்களில் நாங்கள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதில், அவர்களுடைய காலத்தில் போடப்பட்ட நிறைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் ஊழல் அதிகம் இருந்தது. இதன் காரணமாகவே அப்படி தெரிகிறது. கடந்த 6 மாதங்களில் வருவாயை அதிகரித்து உபரியாக வைத்துள்ளோம். அடுத்த 6 மாதங்களில் மூலதன முதலீடும் அதிகரிக்கப்படும்.

நீங்கள் பள்ளி கல்வித்துறையில் என்ன நடந்தது என்பதை பார்த்தீர்கள். புத்தகங்களிலும் என்ன செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையிலேயே ஊழல் செய்திருக்கிறார்கள். திடக்கழிவிலேயே மிக மோசமான ஊழல் நடந்துள்ளது; இதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னைக் கேட்டால் உயர்கல்வி துறையிலும் கண்டிப்பாக ஊழல் செய்திருப்பார்கள். விரிவான விசாரணை தேவை.

ஆந்திரா செல்லும் முதலீடு?

போட்டி இருக்க தான் செய்யும் சார். எந்த காலத்திலும் போட்டி இருக்க தான் செய்யும். அந்தப் போட்டியை சமாளித்து வெற்றி பெறுவதுதான் சவால். நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். முதலமைச்சரின் வழிகாட்டுதலில் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிலர் தங்கள் மனதில் 'ஆந்திரா, ஆந்திரா' என்று திரும்ப திரும்ப சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது போல எல்லாம் நடக்கவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+