ஒரே ஒரு கேள்வி.. கோவை முதியவரை கொடூரமாக தாக்கிய காட்டுமிராண்டி இளைஞர்.. நடுரோட்டில் பதைபதைப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன. வீடு, பொது இடங்கள் எங்குமே பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. கோவையில் முதியவர் ஒருவரை இளைஞர் நடு ரோட்டில் வைத்து கண் மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 72). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளைஞர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தார். அந்த இளைஞர், முதியவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல் சென்றுள்ளார். இதில் பதற்றமடைந்த முதியவர் இளைஞரை கேள்வி கேட்டுள்ளார்.

Coimbatore youth attacked oldman

முதியவரை தாக்கிய இளைஞர்

கோபமடைந்த இளைஞர் தன்னுடைய இருசக்கரை வாகனத்தை நிறுத்தியுள்ளார். முதியவரும் தன் இருசக்க வாகனத்தை நிறுத்தி பேச சென்றுள்ளார். ஆத்திரத்தில் இருந்த இளைஞர், முதியவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். ஹெல்மெட்டை கழற்றாமல், முதியவரை அடித்து சாலையில் தள்ளிவிட்டு காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் வேண்டாம் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் சாலையில் சென்றவர்கள் இளைஞரை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினார்கள். இதில் முதியவர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி பதற்றத்தையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து முதியவர் செல்வராஜ் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. செல்வராஜ் புகார் அளித்து சுமார் ஒரு வாரமாகியும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்துறை விளக்கம்

காயமடைந்த முதியவர் செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், "முதியவர் குறுக்கே வந்துவிட்டார் என்று இளைஞர் அவரை அடித்த சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான தகவல்.

இந்த சம்பவம் குறித்து முதியவர் செல்வராஜ் கடந்த 20 ஆம் புகார் அளித்தார். அன்றைய தினமே காவல்துறை வழக்குப்பதிவு செய்து, இளைஞரை கைது செய்துள்ளோம். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உண்மைக்கு மாறான தகவலை பரப்ப வேண்டாம்" என்று மறுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+