Rasi palan this week: மேஷ ராசிக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப் போகுது.. இந்த வாரத்தில் வரும் அதிரடி மாற்றம்
Rasi palan this week: நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை) இந்த வாரத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த கிரக நிலை மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில், மேஷ ராசியினருக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசியினருக்கு பதட்டங்கள் படிப்படியாகக் குறையும். உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்புகள் பரிபூரணமாக நீங்கும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சரியான மருந்துகளும், மருத்துவமும் கிடைக்கும். மகான்கள் தரிசனம் அனுகூலத்தைத் தரும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
வெற்றி மேல் வெற்றி
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலமும், நம்பிக்கையும் ஏற்படும். உணர்ச்சிவசப்படுதவைத் தவிர்ப்பது வெற்றிகளைத் தரும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வதற்கான யோகம் ஏற்படும். புதிய கெளரவங்கள் உண்டாகும்.
புதிய தொழில்
தொழில் ரீதியாக இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். பல புதிய தொழில்களை செய்வீர்கள். ஆவணங்கள், கோப்புகள், பதிவு செய்யாமல் இருந்து விஷயங்களை செய்து முடிப்பீர்கள். செய்து முடிக்காமல் இழுபறியாக இருந்த காரியங்களை செய்து முடிக்கக்கூடிய யோகம் பெறுவீர்கள். அற்புதமாக வாரமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் நன்றாக நடக்கும்.
பண வரவு
பண வரவு அற்புதமாக இருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்கள் மூலமாக லாபம் கிடைக்கும். கணவனாக இருந்தால் மனைவிக்கு லாபம் கிடைக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கு லாபம் கிடைக்கும். பஞ்சம ஸ்தானத்தில் பாதிப்பு இருப்பதால் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. மன அமைதி கெடுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத சிக்கல்களுக்குள் சிக்குவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
பின்பக்க பகுதி, முதுகு வலி போன்றவை வரும். எல்லா விஷயங்களையும் எளிமையாக நடத்தி முடிப்பீர்கள். மற்றவர்களின் உதவி கிடைக்கும். முருகர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். மஞ்சள் நிற ஆடைகளை அணிவது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.




Click it and Unblock the Notifications
