சிறுமியிடம் அத்துமீறிய திருவள்ளூர் கலெக்டரின் P.A.. தோழியிடம் அழுத மாணவி.. இப்ப அரசு அதிகாரி ஜெயில்ல

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் அடுத்தடுத்து அரசியல் கவனத்தை பெற்று வருகின்றன. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரும் போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார். இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. என்ன நடந்தது?

சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரம்மநாயகம். 55 வயதாகிறது.. திருநெல்வேலியைச் சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக (ஊரக வளர்ச்சித்துறை) பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தனது அப்பார்ட்மெண்ட்டிலேயே அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். அதேபோல பள்ளி மாணவர்களுக்கும் டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

POCSO Case

டியூஷனில் பாலியல் தொல்லை

இவரிடம் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் டியூஷன் படிக்க சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியிடம் பிரம்மநாயகம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொல்லை கடந்த ஒரு வருடமாகவே தொடர்ந்து வந்ததாக சொல்கிறார்கள். சமீபத்தில் மாணவியின் தோழி அவரிடம் விசாரித்தபோதுதான், பிரம்மநாயகம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி மாணவி அழுதுள்ளார்.

இதையடுத்து அந்த தோழி மாணவியின் பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். மதுரவாயல் பகுதியில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இந்தப் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பிரம்மநாயகத்திடம் விசாரணை நடத்தினர்.

யார் இந்த பிரம்மநாயகம்?

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரம்மநாயகம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த பிரம்மநாயகம்? பரந்தூர் விமான நிலைய நிலம் கையகப்படுத்தும் பணியில் இருந்தவர் பிரம்மநாயகம்.. இதற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றியிருக்கிறார்.. அப்போது பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தாராம். இதனிடையே, சில வாரங்களுக்கு முன்புதான் அவருக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது. அதன்பிறகு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்துள்ளார்.

பரந்தூர் ஏர்போர்ட் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி, தற்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே தவெக எம்எல்ஏ

தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுவது அரசியல் ரீதியாகவும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது.. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக அரசுக்கு தலைவலி

2 சம்பவங்களும் வெவ்வேறு வழக்குகள் என்றாலும், இரண்டிலும் அரசு நிர்வாகத்துடன் தொடர்புடைய நபர்கள் இடம்பெற்றிருப்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

பெண்கள் பாதுகாப்பு, சிறுமிகள் பாதுகாப்பு குறித்து அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன... அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான புகார்கள் வரும்போது, பாரபட்சமின்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+