ரிஷப ராசிக்கு தொழிலில் அடிக்கும் அதிர்ஷ்டம்.. சொந்தக்காரர்கள் விஷயத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை) இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த கிரக நிலை மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

Rishabam rasi palan

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு மிகவும் நல்ல வாரமாக இந்த வாரமாக அமையும். 4 ஆம் இடம் சுக ஸ்தானம். வீட்டில் நிறைய செலவுகள் வந்து போகும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பழுதுகள் போன்றவை ஏற்படும். அம்மாவின் ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம், அடைப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் அழுத்தத்தில் என்னென்னமோ பேசுவார்கள். அதனை தவிர்த்துக் கொள்வது நல்லது.

பணவரவு கொட்டும்

100 சதவீதம் சொந்த பந்தங்களை வீட்டுக்குள் விடாமல் இருப்பது. தேவையில்லாத பிரச்சனைகள், பஞ்சாயத்துக்கள் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. வலியும், வேதனையும் அதிகரிக்கும். நேர்மையாக எதிர்கொள்ளும் நம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும். லோன் கிடைக்கும். சந்தோஷமாக இருக்கக்கூடிய அமைப்பு உள்ளது.

சனி வக்கிரம்

லாப ஸ்தானத்தில் சனி வக்கிர நிவர்த்தியடைவதால் அற்புதமான அமைப்பு ஏற்படும். பின்பக்க பகுதி, இடுப்பு வலி போன்றவை வரும். பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காது மூக்கு தொண்டை சளி தொந்தரவுகளைப் பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில்

மீடியா துறை, ஆர்கிடெக்சர், சினிமா, இசை, மருத்துவத் துறையில் இருப்பவர்கள் பெரிய வெற்றியைப் பெறக்கூடிய காலகட்டம். சந்தோஷமான அமைப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மையும், ஏற்றமும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது மகிழ்ச்சியைத் தரும்.

சங்கடம் தீரும்

ரத்தபந்த உறவுகளுடன் பேசுவது மன நிம்மதியைத் தரும். எல்லா விதத்திலும் காணப்பட்டிருந்த சங்கடங்களும் குறையும். பார்வதி தேவியை வழிபாடு செய்வது பல விதத்தில் நன்மையையும், அனுகூலத்தையும் தரும். வியாபாரம், தொழில், படிப்பு, உத்தியோகத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். பெரும் செல்வாக்கையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

வழிபாடு

உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவது சங்கடத்தைப் போக்கும். வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது, சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, மஞ்சள் நிற மாலையை சுவாமிக்கு அணிவிப்பது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+