விஜய்யின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.. 2027-க்குள் தவெக ஆட்சி கவிழும்! பிரபல ஜோதிடர் கணிப்பு!
சென்னை: கிரக நிலைகளின்படி, அக்டோபர் 2026 முதல் வரும் நவம்பர் 2027 வரையிலான காலகட்டத்திற்குள் தமிழக அரசு முழுமையாகக் கவிழ்ந்துவிடும்.. தவெக தனது ஆட்சி அதிகாரம் உட்பட அனைத்தையும் இழக்கும் என பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவின் பேரில் நேற்றுகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த கடும் உத்தரவுகளால், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்தச் சூழலில், பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா என்பவர் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் மற்றும் தவெக ஆட்சியின் ஆயுட்காலம் குறித்து வெளியிட்டுள்ள கணிப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா கணித்துள்ளது என்ன?
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் தவெக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா முதலமைச்சர் விஜய்க்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது: "என் அன்புள்ள ஜோசப் விஜய், உங்களது நல்ல காலம் முடிவுக்கு வரப்போகிறது. உங்களை நீங்களே ஒரு நட்சத்திரம் என்று நினைத்துக்கொண்டால், வானத்தில் உள்ள கிரகங்களின் நகர்வுகளைக் கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அதுதான் ரியல் ஸ்டார். அது உங்களுக்கு எதிராக உள்ளது. இதனை உங்களது தோல்வியாகவே கருதுங்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சத்திலிருந்து அதளபாதாளத்திற்கு வீழ்ச்சி: "உங்களது ஜாதகத்தின் கிரக நிலைகளை ஆராய்ந்தபோதே, கடந்த ஜூலை 11, 2026 அன்றே உங்களுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதை நான் உணர்ந்துவிட்டேன். 2027-ம் ஆண்டிற்குள் நீங்கள் இருக்கும் உச்சத்திலிருந்து மிகக் கீழே அதளபாதாளத்திற்கு விழுவீர்கள்" என அவர் கணித்துள்ளார்.
My dear Joseph Vijay, your time is coming to an end. If you consider yourself a star, be mindful of the stars' movements... Consider it a defeat. Looking at your stars, I had already realised back on July 11, 2026, that your countdown had begun—and that by 2027, you would fall from the heights to the very bottom. Forget about lighting ceremonial lamps; I can say with absolute certainty that you had better get to Delhi quickly to meet the 'Rajmata' (Queen Mother) and the 'Yuvraj' (Crown Prince) if you want to save your position.
— Astro Anirudh Kumar Mishra (@Anirudh_Astro) November 28, 2026
டெல்லிக்கு ஓடுங்கள் என அறிவுரை: "மலையில் தீபம் ஏற்றுவதை விடுங்கள்; உங்களது முதலமைச்சர் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், உடனடியாக டெல்லிக்குச் சென்று 'ராஜமாதா' (காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா) மற்றும் 'யுவராஜ்' (காங்கிரஸ் தலைவர் ராகுல்) ஆகியோரைச் சந்தித்துப் பேசுங்கள் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என அவர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக, காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆட்சி கவிழும் காலம்: "கிரக நிலைகளின்படி, கடந்த அக்டோபர் 2026 முதல் வரும் நவம்பர் 2027 வரையிலான காலகட்டத்திற்குள் தமிழக அரசு முழுமையாகக் கவிழ்ந்துவிடும்.. தவெக தனது ஆட்சி அதிகாரம் உட்பட அனைத்தையும் இழக்கும்" என ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அதோடு எவ்வளவு உச்சிக்கு சென்றாரோ அதை விட அதிக ஆழத்தில் வீழ்வார் என்றும் தெரிவித்துள்ளனர்.
அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் பரபரப்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியின் போன் கால் ரெக்கார்ட் (CDR) தாக்கல் உத்தரவு, மற்றும் ஆளுநரின் விளக்கம் கோரும் கடிதம் என அடுத்தடுத்து நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. இன்னொரு பக்கம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருளின் கைதும் பெரிய நெருக்கடி ஆகி உள்ளது.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ராவின் இந்தக் கணிப்பு தவெக தொண்டர்களிடையே கலக்கத்தையும், எதிர்க்கட்சியினரிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
