தொகுதி மறுவரையறை ஆதரவால் அதிப்தி.. திமுகவில் முதல் விக்கெட் காலி.. மனோ தங்கராஜ் அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலிலும் அதன் தாக்கம் இருக்கிறது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பதாக முடிவு செய்துள்ளது. அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் நிலையில், இந்த முடிவில் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் அதிருப்தியில் உள்ளாராம். விரைவில் திமுகவில் இருந்து வெளியேறி, வேறு கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளது. கடந்தாண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது திமுக எதிர்த்து போரடியது. அதனால் அப்போது அந்த மசோதா தோல்வியடைந்தது. தற்போதைய மசோதாவுக்கு திமுகவிடம், பாஜக ஆதரவு கேட்டதாக தகவல் வெளியானது. திமுக ஆதரிக்க கூடாது என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் பல்வேறு எதிர்ப்புகளை மீறி மசோதாவை ஆதரிப்பதாக திமுக கூறியுள்ளது.

Mano Thangaraj

தொகுதி வரையறை மசோதா திமுக ஆதரவு

இது அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, திமுக எம்பிகள் கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு கூறினார்கள். ஆட்சியில் இருந்தவரை திமுக, பாஜக நேர் எதிராக இருந்தனர். பாஜக எடுத்த அனைத்து முடிவுகளுக்கும் திமுக எதிராக நின்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் கூட, டெல்லியா தமிழ்நாடா என்றி பிரச்சாரத்தை தான் திமுக முன் வைத்தது.

தவெகவின் வெற்றி திமுகவை பாதித்தது. திமுக நீண்ட காலமாக கட்டி காப்பாற்றிய கூட்டணி உடைந்தது. காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட்கள், மதிமுக ஆகியவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறின. கம்யூனிஸ்ட்களை தவிர மற்ற கட்சிகள் தவெக கூட்டணியில் இணைந்தும்விட்டன. திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறையை தீவிரமாக எதிர்த்தவர்கள், இப்போது ஆதரித்துள்ளனர்.

மனோ தங்கராஜ் அதிருப்தி

இந்த முடிவு திமுகவில் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். ஒரே வருடத்தில், அதாவது 2025 ஆம் ஆண்டு மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால் மனோ தங்கராஜ் அதிருப்தியில் உள்ளார். இப்போதுவரை அவர் தான் திமுகவின் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். ஆனால் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அவர் தவிர்த்து வருகிறார். இதனிடையே மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு, திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. திமுகவின் மற்ற நிர்வாகிகள் எல்லாம், தொகுதி மறுவரையறை மசோதாவை ஏன் ஆதரிக்கிறோம் என்று விளக்கம் கூறி வருகிறார்கள்.

விரைவில் கட்சி மாறுதலா

மனோ தங்கராஜ் மசோதாவை கடுமையாக விமர்சித்து தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "தொகுதி மறுவரையறை மசோதாவால், அனைத்து மாநிலங்களுக்கும், ஒரே அளவில் 50 சதவீதம் லோக்சபா தொகுதிகள் அதிகரிக்கப்படும் என கூறி, ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட மசோதாவை மீண்டும் லோக்சபாவில் முன்மொழிந்து நிறைவேற்ற துடிக்கும் பாஜகவின் செயல் வெட்கக்கேடானது. பின்வாசல் வழியே நிறைவேற்றலாம் என்று எண்ணுவது கோழைத்தனம்.

பாஜக தற்போது கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதா, மாநிலங்களுக்கு இடையேயான அதிகார சமநிலையை சீர்குலைக்கும். விரும்பினால் வெகுமதி, மறுத்தால் தண்டனை என் பது போன்ற அரசியலைக் கையில் வைத்து, தென் மாநிலங்களின் உரிமை களை பறித்து, வட மாநி லங்களுக்கு வலிமையை வாரி வழங்கும். மத்திய அரசின் நரித்தனத்திற்கு. தென் மாநிலங்கள் பலி ஆகிவிடக் கூடாது" என்று கூறியுள்ளார். திமுக முடிவுக்கு நேர் மாறாக அவர் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை வைத்து மனோ தங்கராஜ் விரைவில் கட்சி மாறவும் திட்டமிட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+