"அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது இதுதான்!" எலான் மஸ்க்கை வைத்தே அமெரிக்காவை காலி செய்த ஈரான்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பல மாதங்களாக போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்! இதற்கிடையே அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை ஈரான் பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய போர் பல மாதங்களாக தொடர்கிறது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு முழுக்க பதற்றம் தொடர்கிறது. நேரடி தாக்குதல்கள் இல்லை என்றாலும் போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எந்தவொரு பலனும் இல்லை.

Starlink in Iran war US Elon Musk Starlink Iran

ஈரான்

இதற்கிடையே அமெரிககா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க தொழில்நுட்பத்தையே ஈரான் பயன்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஈரான் அரசு தனது படைகளை தொடர்பு கொள்ளவும் அமெரிக்க படைகளுக்கு எதிரான ட்ரோன் தாக்குதல்களை ஒருங்கிணைக்கவும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் அமெரிக்க ராணுவம் ஈரான் ராணுவத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருந்த நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் சேவையை வைத்தே ஈரான் தாக்குதல்களை ஒருங்கிணைத்துள்ளது. இந்த தகவல்கள் தெரிய வந்தபோது அது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் இரு ஸ்பேஸ்எக்ஸ் நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸ்டார்லிங்க்

மார்ச் முதல் வாரத்தில் இருந்தே ஸ்டார்லிங்க் சேவையை ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளது. இது தெரிய வந்ததும் எலான் மஸ்க் கடும் கோபமடைந்துள்ளார். ஈரான் தனது படைகளை ஒருங்கிணைக்கவும், டிரோன் தாக்குதல்களை கண்காணிக்கவும் ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி குவைத்தில் உள்ள போர்ட் ஷுஐபா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் ஸ்பேஸ்எக்ஸ் சாட்டிலைட் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகே, புதிய கட்டுப்பாடுகளை ஸ்பேஸ்எக்ஸ் கொண்டு வந்தது.

ஸ்டார்லிங்க் கருவிகள்

இதற்கு முன்பே ரஷ்யா தனது ட்ரோன்களில் ஸ்டார்லிங்க் கருவிகளை பயன்படுத்துவதாக உக்ரைன் புகார் தெரிவித்திருந்தது. இதையடுத்து உக்ரைனில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் நகரும் ஸ்டார்லிங்க் கருவிகளுக்கு கட்டுப்பாடுகளை ஸ்பேஸ்எக்ஸ் விதித்தது. அதேநேரம் இதனால் உக்ரைனுக்கு பாதிப்பு ஏற்படாது. அதாவது உக்ரைன் ராணுவம் தனது ராணுவத்தில் உள்ள ராணுவ கருவிகளின் பட்டியலை பகிரும். அந்த ராணுவ டிரோன்கள் மற்றும் கருவிகள் செல்லும் வேகத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அதேநேரம் மற்ற கருவிகள் அல்லது டிரோன்கள் உக்ரைனில் செல்லும்போது அதனால் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல முடியாது.

சிக்கல் என்ன

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உக்ரைனில் இதுபோல இணையத்தை முடக்க முடிந்தால் ஈரானிலும் அதை செய்யலாம். ஆனால், அப்படி ஈரானில் மொத்தமாக இணைய சேவையை முடக்கினால்.. ஈரானில் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்கு தெரியாமல் போகும். இதன் காரணமாகவே அங்கு இணைய சேவையை மொத்தமாக முடக்குவது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் இறுதி முடிவை எடுப்பதில் சிக்கல் தொடர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+