தொகுதி மறுவரையறை.. ஸ்டாலினை சந்திக்க சென்னை வரும் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வர உள்ளதாக அமைச்சர் விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்க உள்ளதாக அறிவித்திருக்கும் சூழலில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்க இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு தீவிரமாக உள்ளது. கடந்த முறை திமுகவின் கோரிக்கைகளை பாஜக ஏற்காத சூழலில், அப்போது மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது. இம்முறை திமுகவின் 2 முக்கிய கோரிக்கைகளையும் மத்திய அரசு மசோதாவை சேர்த்துவிட்டது.

Sonia Gandhi

இதனால் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க உள்ளதாக திமுக அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, வில்சன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதன் மூலமாக தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது உறுதியாகியது.

திமுகவின் நிலைப்பாடு நேற்று அறிவிக்கப்பட்ட உடனே, தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. திமுகவின் முடிவுக்கு பாஜகவும் வரவேற்பு அளித்திருக்கின்றனர். இது இந்தியா கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்.

ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் வருகிறார். இதனை அமைச்சர் விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஸ்டாலினிடம் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய கோர உள்ளனர்.

ஆனால் திமுக எடுத்த நிலைப்பாட்டில் மாற்றம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே திமுக உடனான கூட்டணியை உதறிவிட்டு காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சென்று கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இணைந்தது. இதன்பின் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால், திமுக - காங்கிரஸ் இடையிலான உறவு மீண்டும் புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவை கடந்த 2 நாட்களாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ச்சியாக அட்டாக் செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை திடீரென ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது எடுபடுமா என்ற சந்தேகமும் அதிகரித்துள்ளது. சட்டசபைத் தேர்தலின் போது திமுகவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவே ராகுல் காந்தி மறுத்தார். தற்போது ராகுல் காந்தியின் கோரிக்கையை ஸ்டாலின் ஏற்பாரா என்ற கேள்வியும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+