அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கைகூடி வரும் யோகம்.. ரகசியத்தில் கவனம்
Rasi palan this week: நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரையிலான (கார்த்திகை 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை) இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த கிரக நிலை மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் நவம்பர் மாதம் நிறைவடைந்து டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. மாதத்தின் ஆரம்பத்திலேயே நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி வரும் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில், மிதுன ராசியினருக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தம் நீங்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய கெளரவமும், ஏற்றமும் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக இந்து வந்து பாதிப்புகள் நிவர்த்தியாகும். ராகவேந்திரர் வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
கவனம்
வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் தேவையில்லாத மனக் குழப்பம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். குருமார்களின் ஆசிர்வாதம் யோகத்தைத் தரும். தினந்தோறும் கோளார் பதிகத்தை சொல்லி வருவது தடைகளை நிவர்த்தி செய்யும்.
புரோமோஷன்
சனியினுடைய ஆதிக்கம் சந்தோஷத்தைத் தரும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு அவை அனைத்தும் பெற்றுத் தரக்கூடிய வாரமாக இருக்கும். கணவன், மனைவி, காதலன், காதலி கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய பஞ்சாயத்துக்கள், பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. சொந்த வீடு, பொருளாதாரத்தில் முன்னேற்றம், புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம், வெளியூர் செல்லும் யோகம் என அருமையான காலகட்டம்.
புது வருமானம்
3 ஆம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் புதிய விண்ணப்பம், புதிய ஆற்றல்கள், புதிய வருமானம், சகோதரர்களுக்கு நல்ல விஷயங்கள், நிறைய நல்ல மாற்றங்கள், அரசாங்கம் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாவது போன்ற யோகம் ஏற்படும். தொண்டை பாதிப்புகள், கழுத்து, கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இளைய சகோதரன் விட்டுப் பிரிவதற்கான வாய்ப்புள்ளது. தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும்.
ரகசியத்தில் கவனம்
பெரிய பாதிப்பு, மாற்றம் எதுவும் இருக்காது. தெய்வத்தின் அனுகூலம் நன்றாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் தாயார் வழிபாடு ஏற்றத்தைத் தரும். ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நன்மை பயக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி பெறும் யோகம் ஏற்படும் சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.




Click it and Unblock the Notifications
