திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது புகார்! நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்த பெண் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீதான வழக்கில் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருகம் போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண் அதிகாரியை ஜாதி ரீதியில் விமர்சித்ததாக வசந்தம் கார்த்திகேயன் மீது புகார் அளிக்கப்பட்டது.

vasantham karthikeyan

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி தற்போது கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துவிட்டு வந்துள்ளார்.

ஏற்கனவே நேற்று முன் தினம் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் தொடர்பாக பெண் அதிகாரி, முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பானுமதி முன்னிலையில் நேற்று மாலை 5.30 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான இந்தச் சம்பவங்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளன. வசந்தம் கார்த்திகேயன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெண் அதிகாரியின் புகாரை வசந்தம் கார்த்திகேயன் ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். அருள் விக்னேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டை திசை திருப்பவே வசந்தம் கார்த்திகேயன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் என தெரிவித்திருந்தனர்.

யார் இந்த வசந்தம் கார்த்திகேயன்?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். இவர் கடந்த 2016, 2021, 2026 ஆகிய சட்டசபை தேர்தல்களில் திமுக சார்பில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவின் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். கட்சியின் பிரச்சார பயணங்கள், பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைப்பதில் நற்பெயர் பெற்றவர். திமுக தலைமைக்கு நெருக்கமானவர். சட்டசபையில் ஆவேசமாகவும் காமெடியாகவும் பேசுவார். கடந்த முறை நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது திமுக குறித்து முதல்வர் விஜய் வைத்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வசந்தம் ஓடினார். அப்போது சபாநாயகர், வசந்தம் கார்த்திகேயனை "இங்கே வரக் கூடாது, கெட் அவுட்" என கூறி விரட்டினார். மேலும் அவ்வப்போது இருக்கையை மாற்றி உட்கார்ந்துக் கொண்டும் சபாநாயகரின் கண்டனத்திற்குள்ளாவார். முதல்வர் விஜய்யை கூட கிண்டல் செய்து சட்டசபையில் பேசியிருந்தார். அவர் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+