போதும் இத்தோட நிறுத்திக்குவோம்.. வேதனையைக் கிளப்புது வெங்காயம் விலை! ஒரு கிலோ இவ்வளவா? மக்கள் ஷாக்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. இந்த நிலையில் திருவாரூரில் ஒரு கிலோ முதல் தர சின்ன வெங்காயம் 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அதிர்ச்சி மேலும் அதிரித்துள்ளது.
பருவம் தப்பிய மழையால் உற்பத்தி குறைவு, சந்தைகளுக்கு வரத்து சரிவு ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பொதுமக்கள் அன்றாட உணவுக்கு பயன்படுத்தும் அரிசி விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ அரிசி தற்போது 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. 2000 ரூபாய்க்கு விற்கப்பட்ட 26 கிலோ கொண்ட ஒரு அரிசி மூடை தற்போது 3000 ரூபாயை நெருங்கி விட்டது.
இது மட்டுமல்லாமல் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது மழை பெய்ய தொடங்கி இருக்கும் நிலையில் தக்காளி, வெங்காயத்தின் வரவு குறைந்ததும் இவற்றின் விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் சின்ன வெங்காயம், பல்லாரி வெங்காயம், பூண்டு ஆகிய காய்கறி விலை அதிக அளவு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 100-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது சில்லறை விற்பனை விலை என்பது ரூ.260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.30-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.55-க்கும், ஒரு கிலோ பெல்லாரி ரூ.40-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.80-க்கும், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.160-க்கும் என கடுமையாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
பருவமழை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் காய்கறி உற்பத்தி என்பது குறைந்துள்ளது. தற்பொழுது கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலானோர் ஐயப்பன் உள்ளிட்ட சாமிகளுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்த மாதம் இறை வழிபாட்டுக்குரிய மாதம் என்பதால் அசைவத்தை தவிர்த்து சைவத்திற்கு அனைவரும் மாறியுள்ளனர்.
மேலும் திருமணம் முகூர்த்த நிறைந்த மாதம் என பல்வேறு காரணங்களால் காய்கறி தேவை என்பது அதிகரித்து வருகிறது உற்பத்தி குறைந்துதேவை அதிகரிக்கும் பொழுது காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்ததுள்ளது. இதனால் கூடுதல் செலவு செய்து காய்கறிகள் வாங்குவதால் இல்லத்தரசிகள்
அவதி அடைந்து வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
